சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிகரிக்கும் கூலித்தொழிலாளர்கள் தற்கொலை.. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம்.. பதறவைக்கும் டேட்டா

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் கூலித்தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று மத்திய அரசின் தேசிய குற்றப்பதிவு அமைப்பு (NCRB) தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு இடையே மக்கள் மிக மோசமான பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர். முக்கியமான தினசரி வருமானம் பெறும் கூலித்தொழிலாளர்கள் பெரிய அளவில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த பாதிப்பு இப்போது ஏற்படவில்லை. கொரோனாவிற்கு முன்பே இந்தியாவில் கூலித்தொழிலாளர்களின் பொருளாதாரநிலை மோசமாகவே இருந்துள்ளது. கடந்த வருடம் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்ட கூலித்தொழிலாளர்கள் குறித்து வெளியாகி இருக்கும் புள்ளி விவரமே இதை உணர்த்துகிறது.

சம்யுக்தா.. ஸ்போர்ட்ஸ் பிராவில் தப்பில்லை.. நானே ஷார்ட்ஸுடன் ஓடி இருக்கிறேன்.. கவிதா ரெட்டி விளக்கம்சம்யுக்தா.. ஸ்போர்ட்ஸ் பிராவில் தப்பில்லை.. நானே ஷார்ட்ஸுடன் ஓடி இருக்கிறேன்.. கவிதா ரெட்டி விளக்கம்

இந்தியா தற்கொலை

இந்தியா தற்கொலை

இந்தியாவில் கடந்த 2019ம் வருடத்தில் மட்டும் 1,39,123 கூலித்தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள். கூலித்தொழிலாளர்கள் என்றால் விவசாயிகள் அடங்காமல், தினசரி ஊதியத்திற்கு வேலை பார்க்கும் நபர்கள். கடந்த 6 வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் அதிக கூலித்தொழிலாளர்கள் கடந்த வருடம் தற்கொலை செய்து உள்ளனர்.

மிக மோசம்

மிக மோசம்

கடந்த 6 வருடங்கள் முன் நிகழ்ந்த கூலித்தொழிலாளர்கள் தற்கொலையை விட கடந்த 2019ல் இரண்டு மடங்கு கூடுதலாக தற்கொலை நிகழ்ந்துள்ளது. 2019ல் இந்தியாவில் தற்கொலை செய்தவர்களில் 23.4% பேர் கூலித்தொழிலாளர்கள். 2019ல் தமிழகத்தில்தான் அதிகமாக கூலித்தொழிலாளர்கள் தற்கொலை செய்துள்ளனர். தமிழகம் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்து இருக்கிறது. 5,186 கூலித்தொழிலாளர்கள் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.

வேறு எங்கு

வேறு எங்கு

மகாராஷ்டிராவில் 4,128 கூலித்தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். மத்திய பிரதேசத்தில் 3,964 கூலித்தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். தெலுங்கானாவில் 2,858 கூலித்தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். கேரளாவை 2,809 கூலித்தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.

நிலைமை என்ன

நிலைமை என்ன

2014ல் இருந்துதான் கூலித்தொழிலாளர்கள் தற்கொலை குறித்த பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது. அப்போதில் இருந்தே வருடா வருடம் இந்த தற்கொலை சதவிகிதம் அதிகரித்தபடியே இருக்கிறது. 2018ல் 22.4% ஆக இந்த தற்கொலை சதவிகிதம் இருந்தது. தற்போது இது 23.4% ஆக உயர்ந்துள்ளது. 2014ல் நிகழ்ந்த மொத்த தற்கொலையில் 12% தற்கொலை கூலித்தொழிலாளர்கள் தற்கொலை ஆகும்.

அடுத்தடுத்து வருடம்

அடுத்தடுத்து வருடம்

2015 பதிவான மொத்த தற்கொலையில் 17.8% கூலித்தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். 2016ல் பதிவான மொத்த தற்கொலையில் 19.2% கூலித்தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். 2017ல் பதிவான மொத்த தற்கொலையில் 22.1% கூலித்தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.2014 முதல் 2019 வரை தற்கொலை எண்ணிக்கை 15,735ல் இருந்து 32,563 ஆகஉயர்ந்துள்ளது.

ஆண்கள் அதிகமாம்

ஆண்கள் அதிகமாம்

பொதுவாக ஆண் கூலித்தொழிலாளர்கள்தான் அதிகமாக இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். 2019ல் தற்கொலை செய்து கொண்ட 32563 கூலித்தொழிலாளர்களில் 29092 பேர் ஆண்கள். 3467 பேர் பெண்கள். 4 கூலித்தொழிலாளர்கள் மூன்றாம் பாலினத்தவர். அதேபோல் 2019ல் வேலையில்லாத நபர்கள் இடையே தற்கொலை அதிகரித்துள்ளது.

தற்கொலை என்ன

தற்கொலை என்ன

2018ல் பதிவான தற்கொலையில் 8.37% பேர் வேலை இல்லாதவர்கள். இந்த எண்ணிக்கை 12936 ஆகும். கேரளாவில் 10963 பேரும், மகாராஷ்டிராவில் 1511 பேரும், தமிழகத்தில் 1368 பேரும், கர்நாடகாவில் 1293 பெறும், ஒடிசாவில் 858 வேலையில்லாத நபர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வேலை இல்லாதவர்களின் தற்கொலையில் கேரளா முதலிடம் வகிக்கிறது.

2018 மொத்த தற்கொலை

2018 மொத்த தற்கொலை

2018ல் பதிவான தற்கொலையில் 22.4% பேர் கூலித்தொழிலாளர்கள். 17.1% பேர் வீட்டில் இருக்கும் திருமணமான பெண்கள். 9.8% பேர் சுய தொழில் பார்ப்பவர்கள். 7.6%பேர் மாணவர்கள். 7.7% பேர் விவசாயிகள் 9.6% பேர் வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamilnadu tops in the number of suicide of daily wage workers among other states in India in 2019 .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X