தமிழகத்தில் இ - பாஸ் முறை ரத்து.. பொது போக்குவரத்துக்கு அனுமதி.. தமிழக அரசு அதிரடி!
சென்னை: தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு இ பாஸ் முறையில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் 7ஆம் கட்டமாக ஊடரங்கு அமலில் உள்ளத. இந்த மாதம் 31-ஆம் தேதியோடு இந்த லாக்டவுன் முடிவிற்கு வருகிறது. 4ஆம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்படும் போதே தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் படிப்படியாக வழங்கப்பட்டது.

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்றைய தினம் ஆலோசனை நடத்தினார். இதில் தமிழகத்தில் தளர்வுகளை கொண்டு வர மருத்துவர் குழு அனுமதி அளித்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் இ பாஸ் முறையில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இ பாஸ் அறிவிப்பு :
தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ் இன்றி பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு இ பாஸ் நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் இ பாஸ் விண்ணப்பித்த அனைவருக்கும் முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் இ பாஸ் வழங்கப்படும்.

பொது போக்குவரத்து அறிவிப்பு:
மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து, சென்னையில் பெருநகர பேருந்து போக்குவரத்து சேவை 1.9.2020 முதல், நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications