சத்யபிரதா சாஹு தடுமாற்றம்.. உடனே தேவை சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி.. ஸ்டாலின் அதிரடி கோரிக்கை
சென்னை: கோவையில் இருந்து 50 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று இரவு தேனி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களையும், மையங்களையும் பாதுகாக்க சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைவிடுத்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பதில் தமிழகத்தில் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெறுகின்றன.

வாக்குப்பதிவு இயந்திரங்களையும், மையங்களையும் பாதுகாக்க மாநில சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும். ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது கண்டனத்துக்கு உரியது.
தேர்தல் அதிகாரிகளின் செயல்பாடு ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும், ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது. தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையிழந்து விட்டன. தேர்தல் ஆணையம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது கவலை அளிக்கிறது.
சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்துவதற்கு தலைமைத் தேர்தல் அதிகாரி தடுமாறுகிறார். அவரது பேட்டி புதிய பிரச்சினைகளைத்தான் உருவாக்கியுள்ளது. 46 ஓட்டு சாவடிகளில் தவறு நடந்துள்ளதாகவும், மறு வாக்குப்பதிவுக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சத்யபிரதா சாஹு கூறியுள்ளார். அங்கு நடந்த தவறுகள் என்ன என்பது பற்றிய விவரங்களையும், மறு வாக்குப்பதிவுக்கு பரிந்துரைத்த விவரங்களையும் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.
வாக்குப்பதிவு இயந்திரங்களையும், மையங்களையும் பாதுகாக்க சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் சம்பந்தமே இல்லாதது போல் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது கவலை அளிக்கிறது. சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் அதிகாரி சாஹூ தடுமாறுகிறார். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications