கவனம்.. தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வெப்பநிலை உயர போகுதாம்! எவ்வளவு தெரியுமா? வானிலை ரிப்போர்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வருகிறது. இன்னும் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கவில்லை.
ஆனாலும் சென்னை, வேலூர், திருச்சி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் சென்னையில் பிற்பகல் நேரங்களில் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது.

சென்னை
முன்னதாக மார்ச் 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் லேசாக உள்மாவட்டங்களில் மட்டும் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்தது. உள் தமிழகப் பகுதியில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால் சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

மழை இல்லை
ஆனால் கடந்த இரண்டு நாட்களாக பெரிதாக தமிழ்நாட்டில் எங்கும் மழை பெய்யவில்லை. இந்த நிலையில் இன்றும் நாளையும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யலாம். கன்னியாகுமரி, திருநெல்வேலியில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் முன்பே கணித்து இருந்தது.

தமிழ்நாடு வானிலை
இந்த நிலையில் வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 1, 2 மற்றும் 3 ஆகிய மூன்று நாட்கள் வெப்பநிலை அதிகம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இயல்பாக தற்போது 35 - 36 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவி வருகிறது. இது வேகமாக உயரும்.

வெயில்
3 நாட்கள் இயல்பை விட கூடுதலாக 3 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவ வாய்ப்பு உள்ளது. இதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஏற்கனவே வெயில் அதிகமாக இருக்கிறது. இதனால் பல இடங்களில் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். சாலையில் நிறுத்தப்பட்டு இருக்கும் மின்னணு பைக்குகள் கூட பற்றி எரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டில் மேலும் வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications