தமிழகத்தை சில்லென மாற்றும் வானிலை! அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்காம்.. சென்னை வானிலை மையம்

Subscribe to Oneindia Tamil

தமிழ்நாட்டில் கோடைக் காலம் முடிந்துள்ள நிலையில், மாநிலத்தில் பரவலாகப் பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது.

சில நாட்களாகவே தலைநகர் சென்னையிலும் கூட இரவு நேரங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனிடையே வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த அறிவிப்பைச் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

 மிதமான மழை

மிதமான மழை

தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும் நாளையும் (ஜூன் 23,24) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் (ஜூன் 25) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 வரும் நாட்கள்

வரும் நாட்கள்

அதேபோல வரும் ஜூன் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்குத் தொடர்ச்சி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி) 6 செமீ, பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), கடவனூர் (கள்ளக்குறிச்சி) தலா 4 செமீ மழை பெய்துள்ளது.

 சென்னை

சென்னை

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்.

 மீனவர்களுக்கான எச்சரிக்கை

மீனவர்களுக்கான எச்சரிக்கை


இன்றும் நாளையும் குமரிக்கடல் பகுதி, தென் தமிழக கடலோரப் பகுதிகள். மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

 செல்ல வேண்டாம்

செல்ல வேண்டாம்

அதேபோல ஜூன் 25, 26 தேதிகளில் லட்சத்தீவு பகுதி, கேரளா - கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+