சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்த நாளை சென்னை மக்களின் மறக்க முடியாத நாளாகும்.. அதீத மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்

Google Oneindia Tamil News

சென்னை: இந்த நாள் சென்னை மக்களின் மறக்க முடியாத நாளாகும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியது. சிறிது நாட்கள் வெப்பச்சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்தது.

உருவான இரு புயல்களும் அரபிக் கடலில் உருவானது. அவை இரண்டும் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டது. இந்த நிலையில் வங்கக் கடலில் உருவான புயலும் மேற்கு வங்கம் நோக்கி சென்றுவிட்டது.

சென்னை மழை.. ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த செம்பரம்பாக்கம்.. பல ஏரிகளுக்கு அதீத நீர்வரத்து! சென்னை மழை.. ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த செம்பரம்பாக்கம்.. பல ஏரிகளுக்கு அதீத நீர்வரத்து!

வைலண்ட்

வைலண்ட்

இத்தனை நாட்களாக சைலண்ட்டாக இருந்த மழை தற்போது மீண்டும் வைலண்ட்டாக பெய்ய தொடங்கிவிட்டது. அதாவது வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துவிட்டது. இதனால் கடந்த புதன்கிழமை சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

தண்ணீர் சூழ்ந்தது

தண்ணீர் சூழ்ந்தது

இந்த நிலையில் நேற்று இரவு முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கிவிட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாம்பரம், முடிச்சூர், மண்ணிவாக்கம், மேடவாக்கம், மடிவாக்கம், சேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

மேகக் கூட்டங்கள்

மேகக் கூட்டங்கள்

இந்த மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் இந்த நாளை சென்னை மக்கள் மறக்க மாட்டார்கள், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் பகுதிகளை சுற்றிலும் ஏராளமான மேகக் கூட்டங்கள் சூழ்ந்துள்ளன.

அதிக மழை

அதிக மழை

எனவே தமிழகம் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும். இன்றும் கனமழை வச்சு செய்யும். இன்று சென்னையில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தூத்துக்குடியிலும் மழை

தூத்துக்குடியிலும் மழை

கடலூர் மற்றும் தூத்துக்குடி பகுதியிலும் கனமழை பெய்யும். மக்கள் எல்லாரும் பாதுகாப்பாக இருப்பார்கள் என நம்புகிறேன். அதீத மழை அங்கும் பெய்யும் என பிரதீப்ஜான் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

English summary
Tamilnadu Weatherman Pradeep John says that The day which City people cannot forget in their life and on the same day massive clouds moving up towards KTCC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X