14, 15ம் தேதிக்கு அப்பறம் பாருங்க.. இதுதான் நடக்க போகுது,, தமிழ்நாடு வெதர்மேன் தந்த முக்கிய அப்டேட்!
சென்னை; தமிழ்நாடு வானிலை குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக பெய்து வந்தது. கடந்த வாரத்திற்கு முன்பு வரை மழை விடாமல் பெய்து வந்தது. டிசம்பர் முதல் வாரம் வரை தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது.
வரலாற்றில் இல்லாத அளவிற்கு மழை பெய்த நிலையில் நவம்பர் கடைசி வாரம் சென்னையில் பல இடங்களில் வெள்ளம் தேங்கி இருந்தது. இந்த வடகிழக்கு பருவமழையின் போது தமிழ்நாட்டில் புயல் தாக்கவில்லை.

புயல் இல்லை
ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி எங்கும் நகராமல் ஒரே இடத்தில் நின்று கனமழையை கொடுத்தது. இதன் காரணமாக சென்னை தொடங்கி குமரி வரை மொத்தமாக வங்கக்கடல் அருகே இருக்கும் பகுதிகளில் எல்லாம் மிக கனமழை பெய்தது. அதேபோல் தமிழ்நாட்டை மேலும் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் தாக்கியது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்
நவம்பர் முதல் வாரமும், இரண்டாம் வாரமும் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் தமிழ்நாட்டை தாக்கியது. இதில் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டது. புயல் நேரடியாக தாக்கவில்லை என்றாலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமே பலத்த மழையை கொடுத்தது.அதன்பின் புதிய தாழ்வு பகுதி ஆந்திரா நோக்கி நகர்ந்ததால் தமிழ்நாட்டிற்கு மழை குறைந்தது.

வெதர்மேன்
இந்த நிலையில்தான் தமிழ்நாடு வானிலை குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டில் வரும் டிசம்பர் 14, 15 தேதிகளில் இருந்து மழை முற்றிலுமாக குறையும்.

மழை நிற்கும்
இப்போது அங்காங்கே பெய்து வரும் மழையும் மொத்தமாக நின்றுவிடும். அதன்பின் குளிர் அதிகரிக்கும். தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் இதேதான் நிலை. தென் தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆங்காங்கே விட்டுவிட்டு மழை பெய்யும். இந்த டிசம்பர் மாதத்தில் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் நீர் பற்றாக்குறை மொத்தமாக முடிவிற்கு வரும்.

என்ஜாய்
இதனால் அடுத்த 3-4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் சென்னை உட்பட கடலோர மாவட்டங்களிலும், தென் சென்னையிலும், அருகாமையில் உள்ள மாவட்டங்களிலும் என்ன மழை பெய்கிறதோ அதை என்ஜாய் செய்து கொள்ள வேண்டும். டெல்டா மாவட்டங்களில் விரைவில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். சில நிமிடங்களுக்கு அங்கு நல்லமழை பெய்யும், என்று தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications