மயிலாடுதுறையில் "டிராபிக் ஜாமில்" மேகங்கள்.. வெறித்தனமான மழை.. ஒரே நாளில் டபுள் சென்சுரி? வெதர்மேன்
சென்னை: மயிலாடுதுறை மாவட்டத்தில் நீண்ட நேரமாக மேகக் கூட்டங்கள் குழுமியிருப்பதை பார்த்தால் அங்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு அதி கனமழை பெய்திருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த 10 நாட்கள் ஆகின்றன. இதில் தென் மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்துள்ளது. இது புயலாக மாற வாய்ப்பில்லை என வானிலை மையம் கூறியுள்ளது.
எனினும் மிக அதிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தமட்டில் நேற்று இரவு கனமழை பெய்தது.

அதிகாலை
அது போல் இன்று அதிகாலையும் மழை பெய்தது. பகல் நேரங்களில் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இது போன்று தமிழகத்தில் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் இன்றைய தினம் 10- க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

வானிலை மையம்
இந்த கனமழை நாளையும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை தமிழகத்தில் உள்ள 25 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. தற்போது மழையின் நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மயிலாடுதுறை மாவட்டத்தில் நீண்ட மணி நேரமாக மேகக் கூட்டங்கள் குழுமி இருக்கின்றன.

பேய் மழை
இதனால் அங்கு பேய் மழை பெய்து வருகிறது. அனேகமாக ரெட் அலர்ட் எச்சரிக்கைக்கு அதிக வாய்ப்பிருக்கிறது. இப்படி பேய் போல் அடிக்கும் மழையை பார்த்தால் 24 மணி நேரத்தில் 200 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டும். சென்னையில் மேகக் கூட்டங்கள் அங்கும் இங்கும் சுற்றி வருகின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் சீராக மழை பெய்து வருகிறது. இவ்வாறு தனது வலைதளத்தில் அவர் கூறியுள்ளார்.

சென்னை- புதுவை
வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்தம் சென்னை- புதுவை இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வடகடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. கடந்த நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் பெய்ததை போல் இந்த இரு நாட்களில் மழை இருக்கும் என கூறியிருக்கிறார்கள். எனவே மக்கள் வீட்டுக்குள்ளே இருக்குமாறு மாவட்ட நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளார்கள்.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
பிரான்சில் மட்டும் 7 பேர் பலி.. 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஐரோப்பாவை வாட்டும் அதீத வெயில்! -
இந்தியாவை பந்தாட வரும் பிரச்சனை.. எல் நினோ + ஹார்முஸ் நெருக்கடி.. RBI-க்கு தலை சுற்றுகிறது! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications