"சக்கரம்" நகருது.. சென்னைவாசிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. ராணிப்பேட்டை டூ காஞ்சிபுரம் வெளுக்க போகும் மழை
சென்னை: அரபிக்கடலில் புயல் மையம் கொண்டுள்ள நிலையில், தமிழகத்தில் எங்கெங்கு மழை பெய்ய போகிறது என்ற முக்கிய தகவலும் வெளியாகி உள்ளது.
இந்த முறை தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி கொண்டிருந்தது.. வழக்கத்தைவிட இந்த வருடம் தாமதமாகும் என்றும் கூறப்பட்டிருந்தது.
புயல்: அநேகமாக ஓரிரு நாட்களில் தொடங்குவதற்கான அறிகுறிகள் உள்ள நிலையில், பருவமழையும் தென்பட்டு வருகிறது.. அரபிக்கடலில் திடீரென புயல் வரப்போவதாகவும் அறிவிப்புகள் வெளியாகின.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றுமுன்தினம் உருவாகி உள்ளது.. அது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியிருக்கிறது.. இது புயலாகவும் உருப்பெற்று, பைபர்ஜாய் என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இது வடக்கு நோக்கி நகர்ந்து அதி தீவிர புயலாக வலுவடைந்து, அரபிக்கடலிலேயே நிலைகொண்டுள்ளது. மும்பைக்கு தென்மேற்கே 930 கி.மீட்டர் தொலைவில் இருப்பதாக, சொல்கிறார்கள்.. இன்னும் 48 மணி நேரத்தில் வலுப்பெற போவதால், வடமேற்கு திசையில் நகரும் என்றும் யூகிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை: பைபர்ஜாய் புயல் மிக தீவிர புயலாக மாறி உள்ளதால், தமிழகத்தில் 11 மாவட்டங்களில் நேற்றே கனமழை எச்சரிக்கை வந்துவிட்டது.. இன்று முதல், அதாவது 8, 9, 10,11 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய கூடும் என்று வானிலை மையம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான அறிகுறிகளும் பரவலாக தென்பட துவங்கி உள்ளன.
தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்றைய தினம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

வெதர்மேன்: இதனிடையே, தமிழகத்தில் பெய்துவரும் மழை குறித்து, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்.. அதன்படி, இன்றும் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதில், சென்னையில் இன்று மாலை அல்லது இரவு லேசான மழை பெய்யும் என்ற மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளார்.
வெதர்மேன்: குறிப்பாக, சென்னை மட்டுமல்லாது, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.. ஏற்கெனவே பைபர்ஜாய் புயலால் தீவிர மழை பெய்து கொண்டிருக்கிறது.. இதன் காரணமாக தமிழ்நாட்டின் ஒரு சில மாவட்டங்களிலும் மழை இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேனும் இதையே தெரிவித்துள்ளது கூடுதல் மகிழ்ச்சியை தந்து வருகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவல்படி, இன்றும் நாளையும் பலத்த மழை இருக்கும் என்று தெரிகிறது.. அரபிக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ள புயல், நேற்றிரவு 11.30 மணி நிலவரப்படி, கோவாவிற்கு மேற்கு மற்றும் தென்மேற்கே சுமார் 870 கி.மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. மும்பைக்கு தென்மேற்கே 930 கி.மீட்டர் தொலைவிலுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் படிப்படியாக வலுப்பெற்று வடக்கு வடமேற்கு திசையில் அடுத்த தினங்களில் நகரும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், அதற்கான அறிகுறி இன்றே சென்னையிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் தென்பட துவங்கிவிட்டது, கூடுதல் மகிழ்ச்சியை தந்து வருகிறது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications