சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜூன் 6 அதிர்ஷ்டமான நாள்.. இன்று நிச்சயம் மழைக்கு வாய்ப்பு.. இல்லாவிட்டால் நாளை பெய்யும்.. வெதர்மேன்

Google Oneindia Tamil News

சென்னை: ஜூன் 6ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு எப்போதும் அதிர்ஷ்டவசமான நாள் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவமழை கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் கேரளா, கர்நாடகம், தமிழகம் ஆகியவற்றிற்கு முதல் பருவமழை இன்று பெய்யும் என கூறப்படுகிறது. இதனிடையே வங்கக் கடலில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்த தாழ்வு நிலை நாளை தாழ்வு மண்டலமாக மாறுகிறது.

இது வலிமை பெற்று புயலாக மாறும். இதற்கு கதி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பொருளாதாரத்தை தீவிரமாக அழித்து வருகிறது மத்திய அரசு.. ராகுல் காந்தி கடும் தாக்கு பொருளாதாரத்தை தீவிரமாக அழித்து வருகிறது மத்திய அரசு.. ராகுல் காந்தி கடும் தாக்கு

11 மாவட்டங்கள்

11 மாவட்டங்கள்

அதன்படி கன்னியாகுமரியில் மழை கொட்டி வருகிறது. மேற்கண்ட 11 மாவட்டங்களில் வெயில் அதிகமாக இருக்கும் என்றும் மாலை நேரத்தில் மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழை பெய்யாது என்றும் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டங்கள்

மாவட்டங்கள்

இந்த நிலையில் இன்று காலை முதல் சென்னையில் வெப்பமும் மேகமூட்டமும் மாறி மாறி வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறுகையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று அதிர்ஷ்டமான நாளாகும். இன்று இந்த மாவட்டங்களில் திடீர் மழை பெய்யும்.

ஜூன் 6

ஜூன் 6

கடந்த 10 ஆண்டுகளாக இதே நாளில் சென்னையில் எவ்வளவு மழை பெய்துள்ளது என்பது குறித்த புள்ளி விவரத்தை பார்ப்போம். 2011-ஆம் ஆண்டு நுங்கம்பாக்கத்தில் 75 மி.மீ, மீனம்பாக்கத்தில் 53 மி.மீ., புழலில் 42 மி.மீ., சோழவரத்தில் 32 மி.மீ. பெய்துள்ளது. 2012-ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி மழை ஏதும் பெய்யவில்லை.

எத்தனை மி.மீ மழை

எத்தனை மி.மீ மழை

2013 -ஆம் ஆண்டு செம்பரம்பாக்கத்தில் 45 மி.மீ. மழையும், புழலில் 29 மி.மீ. மழையும், மீனம்பாக்கத்தில் 27 மி.மீ., நுங்கம்பாக்கத்தில் 15 மி.மீ. மழையும் பெய்துள்ளது. அது போல் 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் ஜூன் 6 ஆம் தேதி மழை ஏதும் பெய்யவில்லை. 2015-ஆம் ஆண்டு புழலில் 10 மி.மீ. மழை பெய்தது.

நுங்கம்பாக்கம்

நுங்கம்பாக்கம்

அது போல் 2016-ஆம் ஆண்டு செம்பரம்பாக்கத்தில் 45 மி.மீ. மழையும், நுங்கம்பாக்கத்தில் 36 மி.மீ. மழையும் மீனம்பாக்கத்தில் 30 மி.மீ., புழலில் 10 மி.மீ. மழையும் பெய்தது. 2017-ஆம் ஆண்டு புழலில் 30 மி.மீ மழையும், சோழவரத்தில் 22 மி.மீ மழையும் மீனம்பாக்கத்தில் 12 மி.மீ. மழையும் நுங்கம்பாக்கத்தில் 12 மி.மீ மழை பெய்தது.

நிச்சயம்

நிச்சயம்

2018-ஆம் ஆண்டு செம்பரம்பாக்கத்தில் 45 மி.மீ மழையும், நுங்கம்பாக்கத்தில் 35 மி.மீ மழையும், மீனம்பாக்கத்தில் 30 மி.மீமழையும் புழலில் 23 மி.மீ மழையும் பெய்தது. அடுத்த இரு நாட்களில் கதி புயல் உருவாவதால் சென்னைக்கு நிச்சயம் மழை உண்டு என்றும் ஜூன் 6 ஆம் தேதி அதிர்ஷ்டமான நாள் என்பது சரியா என்பதை இன்று காண்போம். இன்று இல்லாவிட்டாலும் நாளையாவது நிச்சயம் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

English summary
Tamilnadu Weatherman says that June 6 is always been a lucky day for Chennai, Kanchipuram, Tiruvallur and Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X