சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு.. ரெட் அலர்ட் எதிர்பார்க்கலாம்.. வெதர்மேன்
Recommended Video
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று இரவு முதல் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நாளை சென்னையில் கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கடந்த 2 தினங்களாக வடதமிழகம், சென்னை, கடலோர மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

2 நாட்களில்
தமிழகத்தில் சராசரியாக பெய்யும் மழையை காட்டிலும் 8 சதவீதம் அதிகரித்துள்ளது. இத்தனை நாட்கள் மழையே இல்லாத நிலையில் தற்போது கடந்த 2 நாட்களில் அதிக மழை பெய்துவிட்டது. தமிழகத்தில் 386 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

ஒரு காற்றழுத்த பகுதி
காஞ்சிபுரம் மாவட்டத்திலும் சராசரியை விட 9 சதவீதம் அளவுக்கு அதிக மழை பெய்துள்ளது. அரபிக் கடல் அருகே இரு காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாகியுள்ளன. அதில் ஒன்று சோமாலியாவுக்கு அருகில் உள்ளது. இன்னொன்று கேரளாவுக்கு பக்கத்தில் ஒரு காற்றழுத்த பகுதி உள்ளது.

பருவமழை
இது தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி வடகேரளா வழியாக கர்நாடகாவுக்கு செல்லும். மேலும் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னையில் இந்த பருவமழையின் நல்ல மழை இன்று ஒரே நாளில் கிடைக்கும்.

50 சதவீதம்
ஏரி பகுதிகளில் அதிக மழை பெய்து வருகிறது. செம்பரம்பாக்கம், பூண்டி, வீராணம், புழல், சோழவரம் ஆகிய ஏரிகளில் 50 சதவீதம் நீர் நிரம்பியுள்ளது. அடுத்த 2 நாட்களில் இன்னும் மழை பெய்யும். நீர் பெருக்கு ஏற்படுத்தும். 2 அல்லது 3 -ஆம் தேதிக்கு பிறகு மழை குறையும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கனமழை பெய்யும். அது போல் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களிலும் கனமழை முதல் அதிக கனமழை பெய்யும் என்றார்.












Click it and Unblock the Notifications