மழை ஓவர்! ஹாட்ரிக் லீவுலாம் இல்ல! போய் ஸ்கூல் ஹோம்வொர்க் பண்ணுங்க.. ஜே.டி. வாத்தியான "ப்ரேடி"
சென்னை: 3 நாள் தொடர்ந்து லீவு கிடைக்கும்னு நினைக்காதீங்க, நாளைக்கு ஸ்கூல் கட்டாயம் உண்டு, போய் வீட்டுப் பாடங்களை முடித்துவிட்டு தயாராகுங்கள் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் (டிவிட்டர் ஐடியின் பெயர் praddy06- ப்ரேடி) பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
கடந்த 29 ஆம் தேதி சென்னை ரெயின்ஸ் எனும் டிவிட்டர் ஹேண்டிலில் இந்த ஆண்டு பருவமழை தொடங்கிய நிலையில் இந்த சீசனில் எந்த நாளில் சென்னைக்கு முதல் மழை விடுமுறை கிடைக்கும் என சென்னை ரெயின்ஸ் எனும் ட்விட்டரில் கருத்து கணிப்பு நடந்தது. அதில் நவம்பர் 1, நவம்பர் 2, நவம்பர் 3 ஆகிய தேதிகளில் விடுமுறை இருக்குமா இல்லை இந்த வடகிழக்கு பருவமழைக்கு பள்ளிகளுக்கு விடுமுறையே இருக்காதா என்ற கருத்து கணிப்பு இருந்தது.

வெதர்மேனின் பழைய போஸ்ட்
இதற்கு தமிழ்நாடு வெதர்மேன் பதிலளிக்கையில் ஒரு வேளை 3 நாட்களும் பள்ளிகளுக்கு விடுமுறை இருக்குமா? அடுத்த வாரம் பள்ளி குழந்தைகளுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். அதே வேளையில் ஆட்சியர்களுக்கு சற்று கடினமான நாளாக இருக்கும் என வெதர்மேன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே இரு நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்ட பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளையும் விடுமுறை அறிவிப்பு வருமா என பள்ளி மாணவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

லீவு விட்டாச்சு
அவர்களுக்காக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னையில் பள்ளிகளுக்கு இரு நாட்கள் தொடர்ந்து லீவு விட்டாச்சு. எனவே நாளைக்கு பள்ளிகளுக்கு விடுமுறை என்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகும். ஹாட் டிரிக் விடுமுறை கிடைக்கும் என எதிர்பார்க்காதீர்கள். ஹோம்வொர்க்கை எல்லாம் முடித்துவிட்டு பள்ளிக்கு செல்ல ரெடியாகுங்கள் என பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்குவது போன்ற ஒரு பதிவை வெதர்மேன் போட்டுள்ளார். இந்த பதிவிற்கு சிலர் என்னாது சென்னைக்கு மழை முடிந்துவிட்டதா என கேட்டுள்ளனர்.

ஸ்டிரிக்ட்
அது போல் என்னா ரொம்ப ஸ்டிரிக்ட்டா இருக்கீங்களே என்றும் தென் தமிழகத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஏதேனும் குட் நியூஸ் இருக்கிறதா என்றும் கேட்டுள்ளனர். வட தமிழகத்தில்தான் கடந்த இரு தினங்களாக மழை வெளுத்து வாங்கியது. அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டது. அதனால் தென் தமிழகம் குறித்து இந்த வலைஞர் கேட்டுள்ளார்.

இரு நாட்கள்
இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை இருக்குனு சொல்லுங்க பாஸ். அப்படியே இந்த வாரம் ஓடிடும். உங்களுக்கு புண்ணியமாக போகும் என்கிறார் இந்த வலைஞர். லஞ்ச் பாக்ஸை கட்டி பிள்ளைகளை டைமுக்கு ஸ்கூலுக்கு அனுப்புவது என்பது மம்மிக்களுக்கு சிரமமாக இருப்பதால் இப்படி ஒரு கமென்ட் வந்துள்ளது.

துணி துவைக்கலாமா
தெய்வமே நாளை துணியை காய போடலாமா, அதற்கு ஏதாவது வாய்ப்புள்ளதா என இந்த வலைஞர் கேட்டுள்ளார். கடந்த 31, நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் மழையால் துணி துவைத்து போட முடியாமல் இருந்தது. பாவம் அவர் கவலை அவருக்கு!

பாவம் உங்களை சும்மாவிடாது
ஸ்கூல் பசங்க பாவம் உங்களை சும்மா விடாது என்கிறார் இந்த வலைஞர். இரண்டு நாட்கள் தொடர்ந்து விடுமுறை விட்ட நிலையில் நாளையும் லீவு கிடைக்கும் என எதிர்பார்த்தனர்.












Click it and Unblock the Notifications