இனி வரும் நாட்களில் மழை வச்சு செய்யும்.. சென்னையிலிருந்து தூத்துக்குடி வரை விருந்துதான்.. வெதர்மேன்
Recommended Video
சென்னை: இனி வரும் நாட்களில் மழை வச்சு செய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டிதீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் போல் நீர் தேங்கியிருந்தது.
தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் மட்டும் அதிகபட்சமாக 6 மணி நேரத்தில் 146 மி.மீட்டர் மழை கொட்டியது.

மழை வச்சு
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் நாளை மறுநாள், டிசம்பர் 1, டிசம்பர் 2 ஆகிய 3 நாட்களுக்கு தமிழக கடலோர பகுதிகளான காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் மழை வச்சு செய்யும்.

தாம்பரம்
வில்லனான ஈரப்பதம் இல்லாத காற்று தமிழக கடலோர பகுதிக்கு செல்வதற்கு முன்னர் நல்ல மழை பெய்ய வேண்டும். நேற்று தாம்பரத்தில் 150 மி.மீ. மழை பெய்யும் என யாராவது எதிர்பார்த்தார்களா? குறைந்த காற்றழுத்த தாழ்வு இல்லை, புயல் இல்லை.

நல்ல வெயில்
கிழக்கு திசை நோக்கி வந்த காற்றால் இத்தகைய மழை பெய்தது. காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், பாண்டிச்சேரி, கடலூர், நாகை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் அடுத்த 4 நாட்களுக்கு நல்ல வெயில் காயும்.

மழை பெய்யும்
சென்னையிலிருந்து தூத்துக்குடி வரை நல்ல ட்ரீட் காத்திருக்கிறது. உள்மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும். இன்று முதல் நாளை காலை வரை கடலோர மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications