இன்று மாலையும்.. நள்ளிரவும் நல்ல மழை இருக்கு.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கு தெரியுமா?
தமிழகத்தில் இன்று மாலையும் நள்ளிரவும் நன்றாக மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் இன்று மாலையும் நள்ளிரவும் நன்றாக மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. முக்கியமாக நீலகிரி மாவட்டம் மழையால் அதிகம் பாதிக்கப்பட்டது.
அதன்பின் கொஞ்சமாக குறைந்த மழை தற்போது மீண்டும் பெய்ய தொடங்கி இருக்கிறது. முக்கியமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள் அதிக அளவு மழை பெறும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழ்நாடு
இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் செய்துள்ள பேஸ்புக் போஸ்டில், தென் தமிழகத்தில் மாலையும், வட தமிழகத்தில் மாலைக்கு பிறகும் மழை பெய்யும். அதேபோல் இன்று இரவு, கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நன்றாக மழை பெய்யும்.

மழை
மேலும் தென் பகுதியில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று மாலை மழை பெய்யும். அதன்பின் மழை மேகங்கள் நகர்ந்து சென்று கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வைக்கும். சென்னையிலும் இதனால் மழை பெய்யும்.

சென்னையில் எப்படி
சென்னையில் நள்ளிரவில் மழை பெய்யலாம். இன்று சென்னையில் மேகம் குறைவாக உள்ளது, வெயிலும் அதிகமாக உள்ளது. அதே சமயம் சென்னையில் நேற்றை விட இன்று அதிகமாக மழை பெய்ய வாய்ய்ப்புள்ளது. அதேபோல் வேலூர், கடலூர், டெல்டா மாவட்டங்கள், திருச்சி, விழுப்புரம், திருவண்ணமலை ஆகிய பகுதிகளில் மழை பெய்யும், என்று குறிப்ப்பிட்டுள்ளார்.

என்ன மும்பை
ஏற்கனவே மும்பையில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. கேரளா, கர்நாடகாவில் அதிகமாக மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் பெய்த மழை காரணமாக காவிரியில் வெள்ளம் ஏற்பட்டு மேட்டூர் அணை நிரம்பியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் தமிழகத்தில் மேலும் மழை பெய்யும் என்று வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications