மேலும் 3 புதிய மாவட்டங்கள்.. லிஸ்ட்டில் எடப்பாடியும் இருக்காம்.. தமிழக அரசின் அடுத்த அதிரடி!
தமிழகத்தில் புதிதாக மூன்று மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளது.
சென்னை: தமிழகத்தில் புதிதாக மூன்று மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளது.
நிர்வாக வசதிக்காக தமிழகத்தில் தொடர்ந்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. புதிய மாவட்டங்களை உருவாக்குவது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
தமிழகத்தில் 32 ஆக இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை வேக வேகமாக உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டில் மட்டும் புதிதாக ஐந்து மாவட்டங்கள் பிறந்தது. இதனால் மாவட்டங்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 37 ஆக உயர்ந்தப்பட்டது.

மாவட்டம்
இப்படி மாவட்டங்களில் பிரிப்பதற்கு பின் நிறைய அரசியல் காரணங்களும் இருக்கிறது. இதன் மூலம் அதிமுக பெரிய அளவில் பலன் அடையும். தேர்தலில் எளிதாக வெற்றிபெற இது பெரிய அளவில் பலன் கொடுக்கும் என்றும் கூறுகிறார்கள்.

சென்ற வருடம்
கடந்த வருடம் மட்டும், நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி, விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு, ஆகிய புதிய மாவட்டங்கள் பிறந்தது. வேலூர் மூன்றாக பிரிக்கப்பட்டு, வேலூரில் இருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் உதயம் ஆனது.

தமிழகம் எப்படி
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் புதிதாக மூன்று மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளது. இன்று நடக்கும் சட்டசபை கூட்டத்தொடரில் இந்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

எங்கு
அதன்படி நாகப்பட்டினத்தில் இருந்து மயிலாடுதுறை, கோவையில் இருந்து பொள்ளாச்சி, சேலத்தில் இருந்து எடப்பாடி ஆகிய புதிய மாவட்டங்கள் உருவாக்கலாம் என்று கூறுகிறார்கள். இதனால் தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரிக்கும்.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications