Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பட்ஜெட்டில் ட்விஸ்ட்.. பத்திரப்பதிவு கட்டணக் குறைப்பு.. பொதுமக்களுக்கு சாதகமானதா அல்லது பாதகமானதா?

பத்திரப்பதிவு கட்டணக் குறைப்பு.. இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு சாதகமானதா அல்லது பாதகமானதா என்பதை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2023 -24 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் முக்கியமாக பார்க்கப்படுவதில் ஒன்று பத்திரப்பதிவு கட்டணக் குறைப்பு.. இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு சாதகமானதா அல்லது பாதகமானதா என்பதை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க பத்திரப்பதிவு கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், " 01.04.2012 அன்று உயர்த்தப்பட்ட நிலத்தின் வழிகாட்டி மதிப்பு, 09.06.2017 அன்று முதல் ஒரே சீராக 33 சதவீதம் குறைக்கப்பட்டது. மேலும், விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணங்களுக்கான பதிவுக் கட்டணம் ஒரு சதவீதத்திலிருந்து நான்கு சதவீதமாக உயர்த்தப்பட்டது. சந்தை மதிப்பிற்கு ஏற்ப வழிகாட்டி மதிப்பை உயர்த்தவும், பதிவுக் கட்டணத்தைக் குறைக்கவும் பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த கோரிக்கைகளை ஏற்று, வழிகாட்டி மதிப்பில் திருத்தத்தைப் பரிந்துரைக்க ஒரு குழுவை அரசு அமைத்துள்ளது.

வழிகாட்டி மதிப்பு

வழிகாட்டி மதிப்பு

இக்குழு நிலஅளவை எண் வாரியாக திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் தேவைப்படும். ஆகவே, வெளிச்சந்தையில் சொத்துகளின் மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதால், இக்குழுவின் அறிக்கை பெறும்வரை, வழிகாட்டி மதிப்பை 08.06.2017 வரை கடைபிடிக்கப்பட்டு வந்த வழிகாட்டி மதிப்பிற்கு ஈடாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. நிலம் வாங்குபவர்களின் சுமையைக் குறைக்க, பதிவு கட்டணத்தை 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

சொத்து விற்பனை

சொத்து விற்பனை

இனி சொத்து விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் ஆகிய ஆவணங்களுக்கு, 8-6-2017 வரை கடைப்பிடிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பில் 5 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் சொத்து மாற்று வரி மற்றும் 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணத்திற்கு 7 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நடவடிக்கைகள் எளிய, நடுத்தர மக்களுக்கு, குறிப்பாக வங்கிக் கடன் மூலம் வீடு வாங்குபவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும்" என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

சாதகமா பாதகமா?

சாதகமா பாதகமா?

2017ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்பு இருந்ததை போல், வழிகாட்டி மதிப்பில் 5 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் சொத்து மாற்று வரி மற்றும் 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணத்திற்கு 7 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும் என பட்ஜெடடில் குறிப்பிடப்பட்டிருப்பது பொதுமக்களுக்கு சாதகமானதா அல்லது பாதகமானதா என்பதை இப்போது பார்ப்போம்.

எவ்வளவு வரி

எவ்வளவு வரி

உதாரணமாக தனி நபர் ஒருவர் 30 லட்சம் ரூபாய்க்கு சொத்து வாங்குகிறார் என வைத்துக்கொள்வோம்.. 2017ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்பு அவர் சொத்தை வாங்குவதற்கு எவ்வளவு கட்டணம் இருந்தது என்பதை பார்ப்போம். சொத்து மதிப்பு 30லட்சம் என்றால், முத்திரைத் தீர்வை 2.10 லட்சம் ஆகும். பதிவுக்கட்டணம் 1 சதவீதம் 30 ஆயிரம் ரூபாய் ஆகும். ஆக மொத்தம் 30 லட்சம் ரூபாய் சொத்துக்கு அவர் 2.40 லட்சம் ரூபாய் அரசுக்கு பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும் என்று இருந்தது.

தனிநபர் சேமிப்பு

தனிநபர் சேமிப்பு

ஆனால் 2017ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு அதே 30 லட்சம் சொத்துக்கு எவ்வளவு பத்திரப்பதிவு கட்டணம் குறைந்தது என்பதை பாருங்கள். 2017ம் ஆண்டு ஜூன் மாதம் வழிகாட்டு மதிப்பு 33 சதவீதம் குறைக்கப்பட்டது. அதேநேரம் பதிவு கட்டணம் ஒரு சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதன்படி, 2017ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு 30 லட்சம் ரூபாய் சொத்து மதிப்பு 20,10,000 ரூபாயாக மாறியது. இதற்கு முத்திரை தீர்வை 7 சதவீதம் கட்டணம் 1,40,700 ஆகவும், பதிவுக்கட்டணம் 80,400 ஆகவும் இருந்தது. மொத்த கட்டணம் 2,21,100 ஆக குறைந்தது. அதாவது 2017 ஜூன் மாதத்திற்கு பின் 30 லட்சம் மதிப்புள்ள சொத்து வாங்கிய தனிநபருக்கு பத்திரப்பதிவு கட்டணத்தில் 18,900 ரூபாய் தொகை சேமிப்பானது.

கூடுதல் செலவு

கூடுதல் செலவு

ஆனால் தற்போது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதன் படி கணக்கிட்டால், 30 லட்சம் ரூபாய் சொத்துக்கு முத்திரை தீர்வையாக 7 சதவீதம், 2.10 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும். பதிவு கட்டணம் 2 சதவீதம் ரூ.60 ஆயிரம் கட்ட வேண்டும் ஆக மொத்தம் மொத்த செலவு 2,70000 ஆக இருக்கும். இதன் மூலம் 30 லட்சம் சொத்து வாங்கும் தனிநபருக்கு பத்திரப்பதிவு கட்டணம் ரூ.30,000 கூடுதலாக செலவாகும்.

செலவு அதிகரிக்கும்

செலவு அதிகரிக்கும்

இதனிடையே வழிகாட்டு மதிப்பு மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் பத்திரப்பதிவு செலவு கூட வாய்ப்பு உள்ளது என்று முன்னாள் பத்திரப்பதிவு துறை தலைவர் ஆறுமுக நயினார் கூறினார். இது தொடர்பாக அவர் கூறும் போது, "வழிகாட்டு மதிப்பை சீரமைக்க குழு அமைத்துள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வழிகாட்டி மதிப்பை சீரமைத்தால் பத்திரப்பதிவு கட்டணம் மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது. அரசுக்கு வருவாயும், பொதுமக்களுக்கு செலவும் ஏற்படும்" என்றார்.

நிலம் வாங்குவோருக்கு

நிலம் வாங்குவோருக்கு

இதனிடையே பத்திரப்பதிவு இப்போது மேற்கொள்வது சிறந்தது என்ற கருத்தை பதிவிட்டுள்ளார் கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பான கிடாய் உறுப்பினர் நவீன் குமார். இதுபற்றி அவர் கூறும் போது, " பல சர்வேக்களில் பார்க்கும் போது வழிகாட்டு மதிப்பு ஏறத்தான் செய்யும். வழிகாட்டு மதிப்பு ஏற ஏற, பத்திரப்பதிவு கட்டணமும் உயரும். எனவே இப்போது நிலம் வாங்கினால் பத்திரப்பதிவு கட்டணமும் குறைவாக இருக்கும்,வழிகாட்டு மதிப்பும் குறைவாக இருக்கும். நாளை வழிகாட்டு மதிப்பு உயர்ந்துவிட்டால் பத்திரப்பதிவு கட்டணமும் உயர்ந்துவிடும்" என்று நவின்குமார் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+