எக்மோர், தி.நகர் மட்டுமல்ல.. சைதாப்பேட்டையிலும் நிப்பாட்டுங்கப்பா.. தமிழச்சி தங்கப்பாண்டியன்
சைதாப்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் தமிழச்சி திடீர் ஆய்வு மேற்கொண்டார்
Recommended Video

சென்னை: "எக்மோர், டி.நகர் மட்டுமில்லை.. சைதாப்பேட்டை ஸ்டேஷனிலும் எல்லா ரயில்களும் நின்றுதான் போகணும்.. இதுதான் மத்திய அரசிடம் நாங்கள் எடுத்து வைக்கும் அடுத்த கோரிக்கை" என்று திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் உறுதி தெரிவித்துள்ளார்.
தன்னுடைய தென்சென்னை தொகுதிக்குட்பட்ட சைதாப்பேட்டை ரயில்வே ஸ்டேஷனுக்கு தமிழச்சி பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் எம்எல்ஏ மா.சுப்பிரமணியனும் வந்திருந்தார்.

ஸ்டேஷனை ஒட்டுமொத்தமாக பார்வையிட்ட அவர், ரயிலுக்காக நின்று கொண்டிருந்த பயணிகளிடம் "உங்களுக்கு இங்க என்ன குறைகள் இருக்கு" என்று பொறுமையுடன் கேட்டறிந்தார்.
அதற்கு பயணிகளும், கழிவறை, எஸ்குலேட்டர், தாய்மார்கள் பாலூட்டும் அறை, சிசிடிவி கேமிராக்கள் குறித்து லிஸ்ட் போட்டு சொன்னார்கள். அவற்றின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்ன தமிழச்சி, தொடர்ந்து செய்தியாளர்களிடமும் பேசினார்.
அப்போது, பயணிகள் தெரிவித்த குறைகள் அனைத்தும் தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் தெரிவிக்கப்படும் என்றார். "சைதாப்பேட்டை ரயில் நிலையத்துக்கு என்று ஒரு பாரம்பரியம் உள்ளது. மக்களின் பயன்பாட்டில் தொடர்ந்து அங்கம் வகிக்கிறது. ஆனால் ரயில்கள் இங்கே நிற்காமல் செல்வதாக மக்கள் ஆதங்கப்படுகிறார்கள்.
எக்மோர், டி.நகர் தான் இருக்கிறதே, எதற்காக சைதாப்பேட்டை என்று கேட்கலாம். ஆனால் சைதாப்பேட்டையில் இருந்து நிறைய பேர் பயணிக்கிறார்கள். அதனால் இந்த ஸ்டேஷன்ல எல்லா ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க போகிறோம்" என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications