சின்னய்யாவை எதிர்த்து ஓட்டு கேட்டுட்டு உயிரோட போய்ருவியா.. மிரட்டுகிறார்கள்.. வேல்முருகன் புகார்

தன் உயிருக்கு ஆபத்து உள்ளதாக செய்தியாளர்களிடம் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேல்முருகன் தருமபுரி வந்தால் உயிரோடு திரும்ப முடியாது என்று என்னை மிரட்டுகிறார்கள்.. இந்த கொலை மிரட்டலால் என்னால் பிரச்சாரம் கூட செய்ய முடியவில்லை" என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

கடந்த 4 தினங்களுக்கு முன்பு வேல்முருகன் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். அதில், "'மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தீவிரமான போராட்டங்களை நான் நடத்தி வருவதால், முதுகெலும்பில்லாத எடப்பாடி அரசு தனது பாதுகாப்பை வாபஸ் பெற்றிருக்கிறது.

எங்களுக்குள் இருக்கும் பங்காளிச் சண்டையில் வேல்முருகன் சாகட்டும் என நினைத்து வாபஸ் பெற்றார்களா? எனத் தெரியவில்லை. என் உயிருக்கு ஆபத்து" என்று தெரிவித்திருந்தார்.

பேட்டி

பேட்டி

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை வேல்முருகன் சந்தித்து பேசினார். அப்போது தொடர்ந்து கொலை மிரட்டல் காரணமாக என்னால் பிரச்சாரம்கூட செய்ய முடியவில்லை என்று விவரித்தார். அப்போது அவர் சொன்னதாவது:

பாமக, பாஜக

பாமக, பாஜக

நான் திமுக கூட்டணிக்கு பிரச்சாரம் செய்யக்கூடாது எங்கு பிரச்சாரம் செய்தாலும் உயிரோடு வீடு செல்ல முடியாது என்று பகிரங்கமாக என்னுடைய முகநூல் பக்கத்திலேயே நூற்றுக்கணக்கான பாமகவினர், ஆர்எஸ்எஸ், பாஜக கும்பல் மிரட்டல் விடுக்கின்றனர். இதையெல்லாம் பிரிண்ட் அவுட் எடுத்து, காக்கி சட்டை போட்டுள்ள இந்த நாட்டின் காவல்துறை தலைவர், இயக்குனர், சட்ட ஒழுங்கு என்று சொல்ல கூடியவர்களிடம் தந்திருக்கிறேன். இதை பத்திரிகையாளர்களாகிய உங்களிடமும் இந்த காப்பியை தருகிறேன்.

தொகுதிகள்

தொகுதிகள்

தொகுதிகளுக்கு பிரச்சாரத்திற்கு செல்லலாம் என்றால் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். 18 சட்டமன்ற தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வதாக இருந்தது. அதற்கான அறிவிப்புகூட முரசொலியில் வந்தது. ஆனால் அதுக்குகூட என்னால் போக முடியவில்லை.

மிரட்டல்

மிரட்டல்

தருமபுரி வந்தால் வேல்முருகன் உயிரோடு திரும்ப முடியாது, எங்க சின்னய்யாவை எதிர்த்து ஓட்டு கேட்டுட்டு உயிரோட போயிடுவீங்களா? அப்படின்னு தொலைபேசியில மிரட்டல், வாட்ஸ்அப்ல மிரட்டல் வந்துட்டே இருக்கு! இதையெல்லாம் கொண்டு போய் பிரிண்ட் அவுட் எடுத்து போலீசில் தந்தேன். ஆனால் நடவடிக்கை இல்லை.

திரும்ப பெறப்பட்டது

திரும்ப பெறப்பட்டது

நேத்து என் வண்டியின் முன்னாலும், பின்னாலும் தலைவர்கள் வர்றாங்க. ஆனா என் வண்டியை மட்டும் சோதனை போடறாங்க. என் வண்டியில கொடி கட்ட கூடாதாம். எனக்கு ஒரே ஒரு போலீஸ் பாதுகாப்புகூட கிடையாது. எனக்கு கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் சிறப்பு பாதுகாப்பு தரப்பட்டது. ஆனால் எடப்பாடி காலத்தில் அது திரும்ப பெறப்பட்டுவிட்டது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

இப்போது என் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கு. டிஜிபிகிட்ட புகார் அளித்தும் எனக்கு பாதுகாப்பு இல்லை. எனக்கு மட்டுமில்லை.. எனது கட்சியை சேர்ந்தவர்களையும் தாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அவர்களுக்கும் உரிய பாதுகாப்பு வேண்டும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+