சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாரீர்.. அணி திரண்டு வாரீர்.. அழைக்கிறார் தமிழிசை.. நாங்க எதுக்கு வரணும்.. நெட்டிசன்கள் கிண்டல்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Modi visiting Tamil Nadu | கருப்பு பலூனை பறக்க விட தயாராகும் வைகோ, பரபரக்கும் மதுரை

    சென்னை: இதுதான் தமிழிசையின் கெத்தே... பாஜகவை எத்தனை பேர் எதிர்த்தாலும் சரி, எத்தனை பேர் விமர்சித்தாலும் சரி... அத்தனையும் கடந்து வந்து கட்சியின் நலனை காப்பதிலேயே குறியாக இருப்பார்!

    பிரதமர் மோடி நாளை தமிழகம் வரப்போகிறார். தமிழக நலனில் அக்கறை காட்டாத பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஒரு பட்டாளமே தயாராகி வருகிறது.

    பல அமைப்புகள் கறுப்பு கொடி காட்ட போகிறோம் என்று பகிரங்கமாக சொல்லி உள்ளனர். அமைதியான முறையில் எதிர்ப்பினை பதிவு செய்ய கோர்ட்டும் அனுமதி அளித்துள்ளது.

    ட்விட்டர் பதிவு

    ட்விட்டர் பதிவு

    ஆனால் இதெல்லாம் தெரிந்தும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் நாளை மதுரை வரும் பிரதமரை வரவேற்க திரண்டு வாரீர் என அறைகூவல் விடுத்துள்ளார். இது சம்பந்தமாக அவர் போட்டுள்ள ட்வீட் ஒன்றில் கூறியுள்ளதாவது:

    வரவேற்போம்

    "ஜனவரி 27ம் தேதி தமிழகத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா மற்றும் பாஜக பொதுக்கூட்டத்திற்கு வருகைதரும் நம் பாரதப்பிரதமர் மோடி அவர்களை வரவேற்க அனைவரும் வாரீர்...அணிதிரண்டு வாரீர்...வாரீர்...வரவேற்போம் சாதனை நாயகனை" என்று பதிவிட்டுள்ளார்.

    அன்னைக்கு ஏன் வரல?

    அன்னைக்கு ஏன் வரல?

    தமிழிசையின் இந்த ட்வீட்டுக்கு ஆதரவும் எதிர்ப்பும் பதிவாகி வருகிறது. 13 அப்பாவிகள் தூத்துக்குடியில் சுட்டு கொல்லப்பட்டபோது வராத பிரதமர், கஜா புயல் பாதிப்புக்கு வராத பிரதமர், இப்போ ஏன் வருகிறார்? நாங்க எதுக்கு அணி திரண்டு வரணும்" என்றும், அடிக்கல் நாட்டவே 5 வருஷம் ஆனா, கட்டி முடிக்க இன்னும் எத்தனை வருஷம் ஆகும் என்றும் தமிழிசையின் ட்வீட்டுக்கு எதிர்மறை கருத்துக்களை பலர் பதிவிட்டு வருகின்றனர்.

    பிளஸ் பாயிண்ட்!

    பிளஸ் பாயிண்ட்!

    ஆனால் எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும், அதனை பக்குவத்துடன் எதிர்கொண்டு, நாகரீகமான அரசியலேயே சமாளித்து செல்வதுதான் தமிழிசையின் பிளஸ் பாயிண்ட்டே!! அந்த வகையில் தமிழிசையை மனசார பாராட்டலாம்!!

    English summary
    Prime Minister Modi will arrive in Madurai tomorrow for AIIMS Hospital. BJP State President Tamizhisai Soundarajan has called for volunteers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X