சென்னை மக்களே அலர்ட்.. நாளை எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? வெளியான அறிவிப்பு
சென்னை: சென்னையில் நாளை (நவ.24) வியாசர்பாடி பகுதியில் மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.
பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழகம் முழுவதும் மின்தடை அறிவிக்கப்படுவது வழக்கம். வழக்கமாக தமிழ்நாட்டில் மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். ஆனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் மின்சாரம் காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

இதேபோல் தமிழ்நாட்டில் சென்னை உள்பட அனைத்து பகுதிகளில் ஞாயிறு மட்டுமே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளமாட்டார்கள். அதாவது ஞாயிறு ஏதோவது சிக்கல் எழுந்தால் ஒழிய, மற்ற சமயங்களில் மின்சாரம் ரத்து ஆகாது. அதேநேரம் சென்னையில் சனிக்கிழமைகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் வியாசர்பாடி பகுதியில் மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெறுவதால் 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: "சென்னையில் நாளை வெள்ளிக்கிழமை (நவ.24) வியாசர்பாடி பகுதியில் 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வியாசர்பாடி மார்க்கெட் மற்றும் தொழிற்பேட்டை, ஈ.எச்.ரோடு, பி.வி.காலனி, சாஸ்திரி நகர், இந்திரா நகர், காந்தி நகர், ஸ்டீபன் சாலை, வியாசர் நகர், புதுநகர், எம்.பி.எம்.தெரு, சென்ட்ரல் குறுக்கு தெரு, ஏ.பி.சி. கல்யாணபுரம், சத்திய மூர்த்தி நகர் 1 முதல் 25-வது தெரு வரை சாமியார் தோட்டம், பல்லா தெரு 1 முதல் 3 வரை, உதய சூரியன் நகர், எஸ்.ஏ.காலனி மற்றும் சர்மா நகர் பகுதியில் மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ன்னதாக இன்று(நவ.23) சென்னை கிண்டியில் தில்லை கங்கா நகர் ஆதம்பாக்கம், பார்த்தசாரதி நகர் 3, 7, 8 வது தெரு, நியூ காலனி 1, 2, 5, 8, 9 வது தெரு, மோகனபுரி 3, 4 மற்றும் 5 வது தெரு வரை , ஈ.பி. காலனி 1 முதல் 3வது தெரு, வி.வி.காலனி, வெல் நகர், ராம் நகர் மெயின் ரோடு 1 முதல் 8வது தெரு வரை, இந்திரா நகர் 1 முதல் 3 வது தெரு வரை உள்ள அனைத்து பகுதிகளுக்கும் இன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் தடை ஏற்பட்டது. பராமரிப்பு பணி முடிந்ததும் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications