மின்சார வாரியம் அசத்திட்டாங்க.. புதிதாக வீடு கட்டுவோருக்கு வந்த அறிவிப்பு.. இதை இப்பவே முடிச்சிடுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிய வீடுகள் அல்லது கட்டிடங்கள் கட்டுபவர்களுக்கு ஒரு முக்கியமான ஆலோசனையை தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது பொதுமக்களின் கவனத்தையும் வெகுவாக பெற்று வருகிறது.

தமிழக மக்களின் பயன்பாட்டுக்காக, தேவைகளுக்காக, அவர்களின் வசதிக்காக, மின்சார வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, வீடுகளில் கரண்ட் பில் கணக்கெடுக்கப்பட்டதுமே, நுகர்வோருக்கு மெசேஜ் வந்துவிடும் அளவுக்கு தொழில்நுட்பத்தை புகுத்தி வருகிறது. இதற்கென 'TANGEDCO' என்ற செயலியும் கொண்டுவரப்பட்டுள்ளது.

tneb tangedco tn electricity board


புகார்கள்:
அதேபோல, வாடிக்கையாளர்கள், மின் தடை, மீட்டர் பழுது, மின் கட்டணம், மின்னழுத்த பிரச்சனை, சேதமடைந்த மின் கம்பம், மின் திருட்டு, மின் கம்பி அறுந்தது, தீ விபத்து தொடர்பான புகார்கள் என்றாலும், இந்த செயலியை பயன்படுத்தி கொள்ளலாம்.

அதுமட்டுமல்ல, வாடிக்கையாளர்களின் தேவைகள், புகார்களை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என்று மின்துறை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போது மழைக்காலம் என்பதால், அனைத்து அதிகாரிகளும் தங்களின் செல்போனை எந்த காரணம் கொண்டும், ஆப் செய்து வைக்கக்கூடாது என்றும் இதை மீறுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இணையதளம்: இந்நிலையில், புதிய வீடுகள் அல்லது கட்டிடங்கள் கட்டுபவர்களுக்கு ஒரு முக்கியமான ஆலோசனையை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது... அதன்படி, தங்களுடைய கட்டுமானப் பகுதிகளுக்கு அருகில் மின்கம்பம் அல்லது மின்கம்பியை வைத்திருக்கும் நபர்கள், TANGEDCOல் உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பாதுகாப்பு சரிசெய்தலுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக https://www.tangedco.org/en/tangedco என்ற இணையதள முகவரியில் புகார் தெரிவிக்கலாம் என்றும், இதன் மூலம் எதிர்காலத்தில் மின் கம்பங்களால் ஏற்படும் உயிரிழப்புகள் உள்ளிட்ட அபாயங்களை தவிர்க்க முடியும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. சாத்தியமான அபாயங்களை தடுப்பதற்கும், எதிர்காலத்தில் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இந்த நடவடிக்கை கையில் எடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள்: இதனிடையே, தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம், கோயம்புத்தூர் பகுதியில் 4000 கோடி மதிப்பிலான 765 /400 கிலோ வாட் துணை மின் நிலைய திட்டத்தையும், அரியலூர் வரை நீட்டிக்கப்படும் மின்சார பரிமாற்ற பாதையையும் செயல்படுத்துவதற்கு ஆலோசகரை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதையடுத்து, முதன்முறையாக துணை மின் நிலையங்களை பராமரிப்பது மற்றும் செயல்படுத்தும் பணிகளை முதன்முறையாக தனியார் வசம் ஒப்படைக்க இருப்பதாகவும் தகவல் கசிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+