இனி பிரச்சனையே இல்லை.. தமிழ்நாடு முழுக்க மின் இணைப்பு முறையில் மாற்றம்.. குஷியான செய்தி
சென்னை: மின்சார பயன்பாடுகளுக்கான புதிய இபி கனெக்சன்களை பெறுவதற்கான விதிமுறைகளை மாற்றி உள்ளது தமிழ்நாடு மின்சார வாரியம்.
உங்கள் இருக்கும் வீட்டின் மேல் தளத்தில் புதிதாக கட்டப்பட்ட அறை அல்லது மேலே உள்ளே வீட்டிற்கு தனி EB இணைப்பைப் பெற திட்டமிடுகிறீர்களா? அது உங்கள் சொந்த வீடாக இருக்கும் பட்சத்தில் உங்கள் வீட்டின் மின்சார கனெக்சனை அதற்கு கொடுக்கலாம்.

அதுவே நீங்கள் வேறு ஒருவரின் வீட்டில் வாடகைக்கு சென்று அங்கே உங்கள் பெயரில் மின்சார கனெக்சன் எடுக்க விரும்பினால் , இதற்கு நீங்கள் வாடகை ஒப்பந்தம் அல்லது அந்த விலாசத்தில் தனி ரேஷன் கார்டை உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
மானியத்தை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க இந்த புதிய விதி கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த புதிய மின்சார யூனிட்டை ஒரே குடும்பம் பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிக்கும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வீட்டு உரிமையாளர் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
மின்சார கட்டணம் மாற்றம்: இது போக சென்னை மட்டுமின்றி அடுத்த சில வாரங்களில் தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்புகளில் மின்கட்டண முறையில் மாற்றம் ஏற்படும் என்று தகவல்கள் வருகின்றன.
பொது விநியோக இணைப்புகளுக்கு உருவாக்கப்பட்ட I-E எனப்படும் புதிய கட்டண வகையை வரும் நாட்களில் தமிழ்நாடு முழுக்க செயல்படுத்த உள்ளனர். தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த நவம்பர் மாதம் சிறிய அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுவான மின்சாரம் வழங்குவதற்கு I-E எனப்படும் புதிய கட்டண வகையை உருவாக்கி, நவம்பர் 1 முதல் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஆனால் இது முறையாக செயல்படுத்தப்படவில்லை. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது என்ன புதிய முறை: அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பொது விநியோக இணைப்புகளுக்கு கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட 1-டி பிரிவின் கீழ் தற்போது ஒரு யூனிட்டுக்கு ரூ.8.15 விதிக்கப்படுகிறது. இது முதலில் 8 ரூபாயாக இருந்தது. அது பின்னர் 8.15 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இது மக்கள் இடையே விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இதற்காக 1 - இ என்ற பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டது. அதன்படி மூன்று தளங்கள் அல்லது அதற்கும் குறைவான அடுக்குமாடி குடியிருப்புகள், 10 குடியிருப்புகள் அல்லது அதற்கும் குறைவான குடியிருப்புகள் மற்றும் சான்ஸ் லிஃப்ட்கள் ஐ-இ பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டு ஒரு யூனிட்டுக்கு ரூ.5.50 வசூலிக்கப்படும். இருப்பினும், TNERC உத்தரவின்படி, I-D மற்றும் I-E வகைகளுக்கு நிலையான கட்டணங்கள் ஒரு kW க்கு ரூ.102 ஆக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இன்னும் செயலுக்கு வரவில்லை: TNERC உத்தரவில், டாங்கெட்கோ முன்மொழிந்தபடி, மாநிலம் முழுவதும் உள்ள சிறிய அடுக்குமாடி குடியிருப்புகளின் நலனுக்காக, பொதுமக்களின் நலனுக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. கட்டணக் குறைப்பால் டாங்கெட்கோவிற்கு வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்ட, மாநில அரசு கூடுதல் தற்காலிக மானியத்தை முன்கூட்டியே விடுவிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டம் நவம்பர், 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. ஆனால் இன்னும் பல குடியிருப்புகளுக்கு இந்த புதிய கட்டண விகிதம் மாற்றப்படவில்லை. இதனால் பல அதிக கட்டணம் செலுத்தும் நிலை இல்லை.
இதனால் மாதம் மாதம் 300 - 500 ரூபாய் வரை பலரும் கூடுதல் கட்டணம் செலுத்துகின்றனர்., சமீபத்தில் மாநில அரசு அறிவித்த குறைக்கப்பட்ட கட்டணக் கட்டணங்களுக்குத் தகுதியான அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பொதுவான விநியோக இணைப்புகளை அடையாளம் காண, டாங்கேட்கோ பணியாளர்கள் வீடு வீடாக ஆய்வு நடத்தினார்கள். வீடு வீடாக இதற்காக சர்வே எடுக்கப்பட்டது.
வெள்ளம் அமல்: ஆனால் அதன்பின் பல இடங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்படவில்லை. வங்கக்கடலில் கடந்த நவம்பர் 26ம் தேதி உருவான மிக்ஜாம் புயல் சென்னையை கடந்த 2 வாரங்களுக்கு முன் தாக்கியது. தமிழ்நாடு கடலோர பகுதியை நெருங்கி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது. அதன்பின் நேற்று முதல்நாள் ஆந்திராவுக்கு சென்று நெல்லுார், மசூலிப்பட்டினம் அருகே இந்த புயல் கரையை கடந்தது.
சென்னையை இந்த புயல் நேரடியாக தாக்கவில்லை என்றாலும் சென்னைக்கு அருகிலேயே புயல் மையம் கொண்டு இருந்ததுதான் எல்லா பாதிப்புக்கும் காரணம். இந்த புயல் காரணமாக கணக்கெடுப்பில் தொய்வு ஏற்பட்டது.
மீண்டும் நடக்கும்; இந்த மாதம் மீண்டும் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டு நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பொது விநியோக இணைப்புகளுக்கு உருவாக்கப்பட்ட I-E எனப்படும் புதிய கட்டண வகையை விரைவில் முழுமையாக செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications