அடிதூள்.. வீடு தேடி வந்த குட் நியூஸ்.. மின்சார வாரியம் இப்படி சொல்லுதே.. இனி சிக்கல் இல்லை!

Subscribe to Oneindia Tamil

சென்னை; தமிழ்நாட்டில் மின்சார தேவை தொடர்பாக மின்சார வாரியம் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கோடை மழை முடிந்து கடுமையாக மழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Tangedco EB board says that electrical consumption in Tamil Nadu is decreasing

அதோடு மே 20ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 5 நாட்களில் தமிழ்நாட்டில் மழை வெளுத்து வாங்கப்போகிறது.

இன்றும் தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மின்சார வாரியம்: தமிழ்நாட்டில் மழை அதிகரித்துள்ள நிலையில் தற்போது மின்சார தேவை குறைந்துள்ளது. நேற்றைய மின் தேவை 17,331 மெகாவாட் அளவுக்கு இருந்தது என்று மின்துறை தகவல் வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 20ம் தேதி மிக அதிகமாக 19,387 மெகாவாட்டாக மின் தேவை இருந்தது. அன்றைய தினம் மின் நுகர்வும் 42.37 கோடி யூனிட் மின்சார தேவை இருந்தது. 2 ஆயிரம் மெகாவாட் மின் தேவையும், ஒரு கோடி யூனிட் மின் நுகர்வும் தற்போது குறைந்துள்ளது என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

தினசரி மின் நுகர்வு 30 கோடி யூனிட்டாக வீடு, தொழிற்சாலை உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் உள்ளது என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

மின்சார வாரியம்: தமிழ்நாட்டு மக்களுக்கு பயன் அளிக்க கூடிய முக்கியமான அறிவிப்பு ஒன்றை மின்சார வாரியம் வெளியிட்டு உள்ளது.

இனி தமிழ்நாட்டில் புதிய மின் இணைப்புகளை வழங்க அதிகபட்சம் 3 நாட்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, இனி கடைகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவில் 3 நாட்களுக்குள் மின் இணைப்பு கொடுக்க வேண்டும்.

புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது அங்கே கூடுதல் மின் சாதனங்களான சிறிய அளவிலான டிரான்ஸ்பார்மர் அமைக்க தேவை இல்லாத பட்சத்தில் 3 நாட்களில் மின்சாரம் தர வேண்டும். இல்லையென்றால் 7 நாட்களில் மின்சாரம் தர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த பிப்ரவரி வெளியான அறிவிப்பு இந்த மாதம் நடைமுறைக்கு வருகிறது,

புதிய முறை; இது போக மேல்நிலை கேபிள்கள் (OH) உள்ள இடங்களில் நிலத்தடி கேபிள்களுக்கு (UG) வசூலிக்கப்படும் அதிக மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படுவதாக நுகர்வோர் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இப்படி புகார்கள்; எழுந்ததையடுத்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) உடனடியாக அதிக கட்டணம் வசூலிப்பதை நிறுத்துமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

நுகர்வோர் கணக்கில் அதைத் திருப்பிச் செலுத்தி அவர்களின் அடுத்தடுத்த பில்களுடன் சரிசெய்துகொள்ளவும் என்று உத்தரவிட்டுள்ளது மேல்நிலை கேபிள்கள் (OH) உள்ள இடங்களில் மின்கட்டணம் குறைவாகவும், நிலத்தடி கேபிள்களுக்கு (UG) அதிக மேம்பாட்டு கட்டணமும் வசூலிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

இதற்காக பயன்படுத்தப்படும் மென்பொருளானது உடனடியாக திருத்தப்பட வேண்டும், மேலும் தற்போதுள்ள ஏற்பாடுகளுடன் மேம்பாட்டுக் கட்டணங்களை மேலும் வசூலிக்க அனுமதிக்கப்படாது. இதுவரை வசூலிக்கப்பட்டுள்ள கூடுதல் மேம்பாட்டுக் கட்டணங்கள் விண்ணப்பதாரர்கள் அல்லது நுகர்வோருக்கு உடனடியாகத் திருப்பித் தரப்பட வேண்டும் அல்லது முன்கூட்டியே நுகர்வுக் கட்டணமாகக் கருதி ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என்று ஆணையம் கடிதத்தில் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+