தமிழ்நாடு மின்சார வாரியம் போட்ட ஆர்டர்.. மாநிலம் முழுக்க பறந்த உத்தரவு.. வருது இபி ஸ்மார்ட் மீட்டர்
சென்னை: தமிழ்நாட்டில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்யும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் இந்த டெண்டரை எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்காக பல நிறுவனங்கள் ஸ்மார்ட் மீட்டர் டெண்டரில் ஈடுபட்டு உள்ளன . நுகர்வோர் நேரடியாக மீட்டர்களை வாங்க வசதியாக, தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தியாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இனி, பொதுமக்கள் மின்சார வாரியத்திடமிருந்து மட்டுமே மீட்டர் வாங்க காத்திருக்க வேண்டியதில்லை. அதற்கான விலைப்பட்டியலையும் மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. மீட்டர் பற்றாக்குறையால் மின் இணைப்பு வழங்குவதில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இபி மீட்டர்
தொழில் நிறுவனங்கள், கடைகள், வீடுகள் என அனைத்து நுகர்வோரும் இந்த அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மீட்டர்களை வாங்கலாம். மீட்டர்களை வாங்கிய பிறகு, நுகர்வோர் அவற்றை நிறுவும் முன் டேம்பர்-ப்ரூஃப் செய்ய டாங்கேட்கோவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
டாங்கேட்கோ அதிகாரிகள் 'முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் மீட்டர்களை பொருத்துவார்கள். முன்னதாக, டாங்கேட்கோவே மீட்டர்களை கொள்முதல் செய்து, சோதனை செய்து மொத்தமாக விநியோகித்து வந்தது. இப்போது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மக்கள் நேரடியாக வாங்க முடியும்.
இருப்பினும், தற்போதைய மீட்டர் தட்டுப்பாடு புதிய மின் இணைப்புகள் வழங்குவதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையை சரிசெய்யும் வகையில், இனி தமிழ்நாட்டில் புதிய மின் இணைப்புகளை வழங்க அதிகபட்சம் 3 நாட்கள் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படித்த நிலையில்தான் தமிழ்நாட்டில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்யும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் இந்த டெண்டரை எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றன.
ஸ்மார்ட் இபி மீட்டர்
அதன்படி, தாழ்வழுத்தப் பிரிவில் வரும் வீடுகள் மற்றும் கடைகளுக்கான மின் இணைப்பு 3 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும். புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது, சிறிய டிரான்ஸ்பார்மர் போன்ற கூடுதல் சாதனங்கள் தேவையில்லாத பட்சத்தில், 3 நாட்களில் மின்சாரம் வழங்கப்பட வேண்டும். தேவைப்பட்டால், 7 நாட்களுக்குள் மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதமே வெளியான இந்த அறிவிப்பு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
மேலும், மேல்நிலை கேபிள்கள் (OH) உள்ள பகுதிகளுக்கு குறைந்த கட்டணமும், நிலத்தடி கேபிள்களுக்கு (UG) அதிக மேம்பாட்டுக் கட்டணமும் வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC), அதிக கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்துமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
இபி உற்பத்தி : மென்பொருள்
அதிகமாக வசூலிக்கப்பட்ட தொகையை நுகர்வோர் கணக்கில் திருப்பிச் செலுத்த வேண்டும் அல்லது அவர்களின் அடுத்தடுத்த கட்டணங்களுடன் சரிசெய்ய வேண்டும் என்றும் TNERC உத்தரவிட்டது. இதற்காக பயன்படுத்தப்படும் மென்பொருள் உடனடியாக திருத்தப்பட வேண்டும் என்றும், தற்போதுள்ள முறைகளுடன் மேம்பாட்டுக் கட்டணங்களை மேலும் வசூலிக்க அனுமதிக்கப்படாது என்றும் ஆணையம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. இதுவரை வசூலிக்கப்பட்ட கூடுதல் மேம்பாட்டுக் கட்டணங்கள் விண்ணப்பதாரர்களுக்கு உடனடியாகத் திருப்பித் தரப்பட வேண்டும் அல்லது முன்கூட்டியே நுகர்வுக் கட்டணமாகக் கருதப்பட்டு ஆணையத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications