மின்சார வாரியம் அசத்திட்டாங்க.. தமிழ்நாடு முழுக்க மக்களுக்கு அனுப்பிய மெசேஜ்.. உடனே நோட் பண்ணுங்க
சென்னை: தமிழ்நாட்டு மின்சார வாரியம் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. மக்களுக்கு ஏற்படும் முக்கியமான பாதிப்பு ஒன்று தொடர்பாக மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி வீடுகளுக்கு அருகே உள்ள மின் கம்பங்களை மாற்றுவதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டு உள்ளது.
அதன்படி, மின்சார வாரியம் வெளியிட்டுள்ள போஸ்டில்.. மின் கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டுமா? வீட்டின் மேலே செல்லும் மின் கம்பிகளை, வீட்டு மனை / நிலத்தில் உள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்க, இணைய வழியில் விண்ணப்பியுங்கள். இதற்காக இணைய முகவரி: https://app1.tangedco.org/nsconline/mobval.xhtml?apl=DCW3ஐ கிளிக் செய்து கோரிக்கைகளை முன் வைக்கலாம்.

வீட்டின் மேலே செல்லும் மின் கம்பிகள், வீட்டு மனை / நிலத்தில் உள்ள மின் கம்பங்களை இடமாற்ற இந்த மெயிலில் தகவல் அளிக்கலாம். இதன் பின் உடனே TANGEDCO அதிகாரிகள் உங்களை தொடர்பு கொண்டு பணிகளை செய்வார்கள்.
முன்னதாக tangedco பழைய முகவரியில் கட்டணம் செலுத்துவது தொடங்கி பல சேவைகள் கடினமாக இருந்தன. அவை மெதுவாக இயங்கின. இப்போது அது மொத்தமாக மாற்றப்பட்டு புதிய சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இனி ஒரே இடத்தில் மக்கள் அனைத்து சேவைகளையும் மேற்கொள்ள முடியும்.
அதிரடி அறிவிப்புகள்: தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த ஒரு சில நாட்களில் மட்டும் ஏகப்பட்ட புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. உதாரணமாக தமிழ்நாட்டில் வாட்ஸ்ஆப்-ல் மின்கட்டணம் செலுத்தும் வசதியை மின்சார வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டணம் செலுத்துவதை எளிதாக்கி உள்ளது. பயன்பாடு 500 யூனிட்டுகளுக்கு மேலே உள்ள நுகர்வோர்களுக்கு யுபிஐ (UPI) வாயிலாக கட்டணம் செலுத்தும் வாட்ஸ்ஆப் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
வாட்ஸ்ஆப்பில் TANGEDCO இலச்சினை மற்றும் பச்சை ✅ குறியீடு, இருக்கும். எண் 94987 94987 என்பதை உறுதி செய்து கட்டணம் செலுத்தலாம். பதிவு செய்யப்பட்ட எண்ணில் இதற்கு மெசேஜ் அனுப்பினால் அதில் பில் கட்டணம் என்ற ஆப்ஷன் வரும். அதில் கிளிக் செய்தால் நம்முடைய கட்டணம் காட்டும்.
இதில் பயன்பாடு 500 யூனிட்டுகளுக்கு மேலே உள்ள நுகர்வோர்களுக்கு யுபிஐ (UPI) வாயிலாக கட்டணம் செலுத்த முடியும்.
மின்சார வாரியம்: இது போக தமிழ்நாட்டு மக்களுக்கு பயன் அளிக்க கூடிய முக்கியமான அறிவிப்பு ஒன்றை மின்சார வாரியம் வெளியிட்டு உள்ளது.
இனி தமிழ்நாட்டில் புதிய மின் இணைப்புகளை வழங்க அதிகபட்சம் 3 நாட்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, இனி வீடு, கடைகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவில் 3 நாட்களுக்குள் மின் இணைப்பு கொடுக்க வேண்டும். விண்ணப்பம் கொடுத்த உடனே மின் இணைப்பு கொடுக்கப்பட வேண்டும்.
புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது அங்கே கூடுதல் மின் சாதனங்களான சிறிய அளவிலான டிரான்ஸ்பார்மர் அமைக்க தேவை இல்லாத பட்சத்தில் 3 நாட்களில் மின்சாரம் தர வேண்டும். இல்லையென்றால் 7 நாட்களில் மின்சாரம் தர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications