இரவோடு இரவாக.. தமிழ்நாட்டு மக்களுக்கு நற்செய்தி.. மின்சார வாரியம் அனுப்பிய மெசேஜ்.. ரொம்ப முக்கியம்
சென்னை: தமிழ்நாட்டு மக்களுக்கு முக்கியமான ஒரு நல்ல செய்தியை மின்சார வாரியம் வெளியிட்டு உள்ளது. நேற்று இரவு திடீரென வெளியான இந்த அறிவிப்பு மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
மின்சார வாரியமான tangedco வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டு மக்களுக்கு நற்செய்தி, தமிழக அரசின் புதிய ஆணைப்படி கீழ்காணும் கட்டிடங்களுக்கு, மின் இணைப்பு பெற 'கட்டிட நிறைவு சான்றிதழ்' தேவை இல்லை.

14 மீட்டர் உயரம் மிகாமல் உள்ள 8 குடியிருப்பு அலகுகள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கு நிறைவு சான்றிதழ் இல்லை. 750 சதுர மீட்டர் பரப்பளவிற்குட்பட்ட வீடுகளுக்கு நிறைவு சான்றிதழ் இல்லை. 14 மீட்டர் உயரம் மிகாமல் 300 சதுர மீட்டர் கட்டிட பரப்பளவிற்குட்பட்ட வணிக கட்டிடங்ககளுக்கு நிறைவு சான்றிதழ் இல்லை.
அனைத்து தொழிற்சாலை கட்டிடங்களுக்கு நிறைவு சான்றிதழ் இல்லை. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல அதிரடி மாற்றங்கள் நடந்து வருகின்றன. பல முக்கியமான அறிவிப்புகள் தினம் தினம் வெளியாகி வருகின்றன.
மின்சார வாரியம்: தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு பதவி ஏற்றதில் இருந்தே பல அதிரடி முடிவுகளை அறிவித்து வருகிறார். அந்த வகையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் லண்டனில் இருந்து முக்கியமான டீம் ஒன்றை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்துள்ளார். அவர்களுக்கு சிறப்பு ப்ரொஜெக்ட் ஒன்றும் கொடுக்கப்பட உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை மனதில் வைத்து முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை வகுத்து உள்ளார். அதன்படி லண்டனில் இருக்கும் பிரபல கன்சல்டன்சி நிறுவனமான Ernst & Young நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் மின்சார களப்பணியாளர்களுக்கு மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பின்வரும் செயல்களை செய்ய முடியும்.
• மின்கட்டணம் செலுத்தாமல் உள்ள இணைப்புகள் மற்றும் கட்டணம் செலுத்திய இணைப்புகள் பற்றிய விபரங்களை அறிய முடியும்.
• மின் பயன்பாடு கணக்கெடுக்கப்பட்ட மற்றும் கணக்கு எடுக்கப்படாத விபரத்தை அறிய முடியும்.
மின் இணைப்பு பெயர் மாற்றம், மின் பளு குறைப்பு அல்லது அதிகரிப்பு தொடர்பான விண்ணப்பங்கள் பற்றி அறிய முடியும்.
மின்னகம் சேவை மையம், இணையதளத்தில் மின்சார சேவை தொடர்பாக நுகர்வோர் அளிக்கும் புகார் மற்றும் அதன்மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிய முடியும்.
பரிந்துரை; இது போக Ernst & Young நிறுவனம் தமிழ்நாட்டில் இருக்கும் 50 பொதுத்துறை நிறுவனங்களை ஆய்வு செய்து வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களின் ஆண்டு/காலாண்டு அறிக்கைகள், நடப்பு வருமான குறிப்புகள், இடைக்கால பொருளாதார அறிக்கைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்திறன் போக்குகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய உள்ளனர். அந்த நிறுவனங்களின் பல்வேறு பொருளாதார அறிக்கைகளை வைத்து இந்த நிறுவனம் அவர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய உள்ளனர்.
நிதி அமைச்சகத்தின் பிரிவான பொது நிறுவனங்களின் பணியகம் என்ற பிரிவுடன் இவர்கள் இணைந்து செயல்பட உள்ளனர். இந்த நிறுவனம் சமீபத்தில் மின்சார வாரியத்தில் ஆய்வு செய்தது. இந்த ஆய்வு முடிவில் மின்சார வாரியம் தொடர்பாக முக்கியமான பரிந்துரைகளை அந்த நிறுவனம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications
