இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் குறைந்த அளவு மின் தடை உள்ள மாநிலம்.. மத்திய அரசு பாராட்டு
சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்திற்கு மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் வி.கே.சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கோடை மழை முடிந்து கடுமையாக மழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிக கனமழைக்கான அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மழை அதிகரித்துள்ள நிலையில் தற்போது மின்சார தேவை குறைந்துள்ளது.

மின் தேவை 17,331 மெகாவாட் அளவுக்கு இருந்தது என்று மின்துறை தகவல் வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 24ம் தேதி மிக அதிகமாக 19,387 மெகாவாட்டாக மின் தேவை இருந்தது. அன்றைய தினம் மின் நுகர்வும் 42.37 கோடி யூனிட் மின்சார தேவை இருந்தது.
2 ஆயிரம் மெகாவாட் மின் தேவையும், ஒரு கோடி யூனிட் மின் நுகர்வும் தற்போது குறைந்துள்ளது என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. தினசரி மின் நுகர்வு 30 கோடி யூனிட்டாக வீடு, தொழிற்சாலை உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் உள்ளது என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
மின்சார பயன்பாடு: தமிழ்நாடு மின்வாரியத்திற்கு மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் வி.கே.சிங் பாராட்டு தெரிவித்து உள்ளார். இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் குறைந்த அளவு மின் தடை உள்ள மாநிலம். தமிழ்நாட்டின் மின்சார நம்பகத்தன்மை, வளர்ந்த நாடுகளுடன் சமமானது.
மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு சிறப்பாக உள்ளது. டெல்லியில் நடந்த மின் துறை பகிர்மான நிறுவனங்களின் ஆய்வுக் கூட்டத்தில் மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் வி.கே.சிங் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
மின்சார வாரியம்: தமிழ்நாட்டு மக்களுக்கு பயன் அளிக்க கூடிய முக்கியமான அறிவிப்பு ஒன்றை மின்சார வாரியம் வெளியிட்டு உள்ளது.
இனி தமிழ்நாட்டில் புதிய மின் இணைப்புகளை வழங்க அதிகபட்சம் 3 நாட்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, இனி டு, கடைகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவில் 3 நாட்களுக்குள் மின் இணைப்பு கொடுக்க வேண்டும்.
புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது அங்கே கூடுதல் மின் சாதனங்களான சிறிய அளவிலான டிரான்ஸ்பார்மர் அமைக்க தேவை இல்லாத பட்சத்தில் 3 நாட்களில் மின்சாரம் தர வேண்டும். இல்லையென்றால் 7 நாட்களில் மின்சாரம் தர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த பிப்ரவரி வெளியான அறிவிப்பு இந்த மாதம் நடைமுறைக்கு வருகிறது,
புதிய முறை; இது போக மேல்நிலை கேபிள்கள் (OH) உள்ள இடங்களில் நிலத்தடி கேபிள்களுக்கு (UG) வசூலிக்கப்படும் அதிக மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படுவதாக நுகர்வோர் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இப்படி புகார்கள்; எழுந்ததையடுத்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) உடனடியாக அதிக கட்டணம் வசூலிப்பதை நிறுத்துமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
நுகர்வோர் கணக்கில் அதைத் திருப்பிச் செலுத்தி அவர்களின் அடுத்தடுத்த பில்களுடன் சரிசெய்துகொள்ளவும் என்று உத்தரவிட்டுள்ளது மேல்நிலை கேபிள்கள் (OH) உள்ள இடங்களில் மின்கட்டணம் குறைவாகவும், நிலத்தடி கேபிள்களுக்கு (UG) அதிக மேம்பாட்டு கட்டணமும் வசூலிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
இதற்காக பயன்படுத்தப்படும் மென்பொருளானது உடனடியாக திருத்தப்பட வேண்டும், மேலும் தற்போதுள்ள ஏற்பாடுகளுடன் மேம்பாட்டுக் கட்டணங்களை மேலும் வசூலிக்க அனுமதிக்கப்படாது. இதுவரை வசூலிக்கப்பட்டுள்ள கூடுதல் மேம்பாட்டுக் கட்டணங்கள் விண்ணப்பதாரர்கள் அல்லது நுகர்வோருக்கு உடனடியாகத் திருப்பித் தரப்பட வேண்டும் அல்லது முன்கூட்டியே நுகர்வுக் கட்டணமாகக் கருதி ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என்று ஆணையம் கடிதத்தில் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications