நொடிக்கு நொடி.. இபி பில் கட்டிட்டீங்களா? கரண்ட் பில் கட்டினதுமே இதை செய்யணுமாம்.. மின்வாரியம் அதிரடி
சென்னை: பொதுமக்களின் வசதிக்காக, கரண்ட் பில் கணக்கீட்டில் புது மாறுதல்களையும், நவீன வசதிகளையும் மின்துறை கையில் எடுத்து வரும்நிலையில், இன்னொரு வசதியையும் தற்போது ஏற்படுத்தியிருக்கிறது. என்ன அது?
தமிழக மக்களின் வசதிக்காகவும், பயன்பாட்டுக்காகவும், மின்வாரியத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. அந்தவகையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tangedco) ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கையில் எடுத்துள்ள நிலையில், அதற்கான டெண்டரையும் அரசு கோரியுள்ளது..

மின் கணக்கீட்டாளர்களின் பணியை, இந்த ப்ளூடூத் மீட்டர் செய்கிறது. இதனால் கால நேரம் குறைவதுடன், துல்லியமான கரண்ட் பில் எவ்வளவு என்பதை அறிந்து கொள்ளலாம்
மொபைல் செயலி: இதேபோல, இன்னொரு வசதியையும் மின்துறை கொண்டுவரப்போவதாக சில நாட்களுக்கு முன்பு செய்தி வந்தது.. அதாவது, மின் ஊழியர்கள் அலுவலகம் வந்து கையடக்க கருவியில் உள்ள கணக்கெடுப்பு விபரங்களை, அலுவலக கம்ப்யூட்டரில் அப்லோடு செய்கிறார்கள்..
சில நாட்களில், மின் கட்டண விபரம் நுகர்வோருக்கு, SMS வாயிலாக அனுப்பப்படுகிறது. ஆனால், கணக்கெடுத்த உடனேயே, கட்டண விபரம் தெரிவிக்க, புது "மொபைல் செயலி" அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட உள்ளதாம்.
அதன்படி, மொபைல் செயலி, ஊழியர்களின் செல்போனில் டவுன்லோடு செய்யப்படும். அதனுடன் ஒரு, "ஆப்டிகல் கேபிள்" வழங்கப்படும். கணக்கெடுக்கும்போது ஒயரை மீட்டரில் செருகி, போனுடன் இணைத்துவிட்டால் போதும்.. இப்போது செயலியை இயக்கியதும் மீட்டரிலுள்ள மின் பயன்பாடு, அதற்கான கட்டண விபரங்கள், செயலி மற்றும் மின் வாரிய சர்வரில் வந்துவிடும். உடனே, நுகர்வோருக்கு SMS சென்றுவிடும்.
மெசேஜ்: இதற்கான பணிகள் முடிவடைந்த நிலையில், விரைவில் அறிவிப்பு வரும் என்றெல்லாம் செய்திகள் வந்தன. அதேபோல, சில நாட்களுக்கு முன்பு, தாழ்வழுத்தப் பிரிவில் இடம்பெறும் தொழில் மற்றும் வணிக இணைப்புகளில் மின் பயன்பாட்டைக் கணக்கெடுத்த உடனேயே தெரிவிக்கும் வகையில், புது செல்போன் செயலியை, தமிழக மின்வாரியம் அறிமுகப்படுத்தியிருந்தது.
அந்த அலுவலகங்களின் உதவிப் பொறியாளர்கள், செல்போன் செயலி மூலமாக தாழ்வழுத்தப் பிரிவில் இடம்பெறும் தொழில், வணிக இணைப்புகளில் மின் பயன்பாட்டை கணக்கெடுத்தனர். அந்த விவரங்கள் துல்லியமாக பதிவாகின. இந்தப் பரிசோதனை முயற்சி வெற்றி பெற்றதால், ஒரு மாதத்திற்குள்ளேயே அனைத்துப் பிரிவு அலுவலகங்களிலும் செல்போன் செயலியில் மின்பயன்பாட்டை கணக்கெடுக்க வேண்டும் என்று மண்டலப் பொறியாளர்களுக்கு, மின்வாரிய தகவல் தொழில்நுட்பப் பிரிவு உத்தரவிட்டிருந்தது.
அடுத்த அதிரடி: இப்படி அடுத்தடுத்த வசதிகளை மின்வாரியம் செய்துவரும் நிலையில், இன்னொரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, மின் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை, மின் கட்டண வசூல் மையம், அரசு, இ - சேவை மையம் அஞ்சல் நிலையங்களில் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு நீங்கள் கட்டணம் செலுத்தியதுமே, அதற்கான ரசீது வழங்கப்பட்டுவிடுமாம்.
ரசீதுகள்: மின் வாரிய இணையதளம், செப்போன் ஆப், "பாரத் பில் பே" வாயிலாக டிஜிட்டல் முறையிலும் செலுத்தலாம்.. முந்தைய மின் கட்டண ரசீதுகளை பெற விரும்புவோர், அதை வெப்சைட்டில் டவுன்லோடும் செய்து கொள்ளும் வசதியை, மின்வாரியம் செயல்படுத்தி உள்ளது. அதன்படி, மின் வாரியத்தின், "எக்ஸ்'" என்ற வெப்சைட் வாயிலாக, 'tnebnet.org/.என்ற இணையதள பக்கத்திற்கு நேரடியாக சென்று, மின் இணைப்பு எண், ரசீது எண், தேதியை பதிவிட்டு, ரசீதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications