சென்னை பல்லாவரத்தில் வந்து பாருங்க.. பறந்து வந்த மின்வாரிய அதிகாரிகள்.. உடனே நடந்த மேஜிக்
சென்னை: சென்னை பல்லாவரத்தில் வயர்கள் தொங்கிய நிலையில் மிக அபாயகரமான முறையில் இருந்த டெலிபோன் கம்பம் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தை டேக் செய்து ஒருவர் புகார் அளித்திருந்தார். அந்த புகார் குறித்து மின்வாரிய அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்துள்ளனர்.
போஸ்ட் மரம் பிரச்சனை, மின் வயர்கள் அறுந்து விழுந்துள்ளது. மின் வயர்கள் எங்காவது ஆபத்தான முறையில் இருக்கிறது. மின் கம்பங்கள் ஆபத்தான முறையில் இருக்கிறது. மின் கம்பத்தால் பாதுகாப்பு இல்லை என்று கருதினால் உடனே மின்வாரியத்திற்கு போனில் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தலாம்.

அதேநேரம் மேற்கண்ட பிரச்சனைகள் இருந்தால், போட்டோ அல்லது வீடியோ எடுத்த தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை டேக் செய்தும் புகார் அளிக்கலாம். அப்படி புகார் அளித்தால் உடனே மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் சென்னை பல்லாவரத்தில் வயர்கள் தொங்கிய நிலையில், மின்சாரம் பாய்ந்தபடி, மிக அபாயகரமான முறையில் இருந்த டெலிபோன் கம்பத்தை உடனே அகற்றி சரி செய்தார்கள் மின் வாரிய அதிகாரிகள்.
டேவிட் மனோகரன் என்பவர் வெளியிட்ட ட்வீட் பதிவில், சென்னை பழைய பல்லாவரம், தேன்மொழி நகர், 1வது தெருவில், மின்கம்பத்தின் கீழ் அமைந்திருக்கிறது ஜியோ செல்போன் கம்பம், மின்சார வயர்கள் ஆபத்தானமுறையில் ஜியோ செல்போன் கம்பத்தில் தொங்குகிறது. அந்த கம்பத்தில் மின்சாரம் பாய்கிறது எனவே அதனை உடனே கற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
Happy that #TANGEDCO has responded and acted immediately to remove the JIO from that place. @TThenarasu @RajeshLakhani69 @TANGEDCO_Offcl @EB_Adyar_Tmbm @TambaramTNEB pic.twitter.com/2rOYVD4HI2
— David Manohar (@DavidManohar7) November 28, 2023
அவரது கோரிக்கையை ஏற்று உடனடியாக அங்கு வந்த அதிகாரிகள், மின்சாரம் அபாயகரமான முறையில் சென்ற வயர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அந்த கம்பத்தில் மின்சார வயர்கள், கேபிள் வயர்கள், இண்டர்நெட் வயர்கள் என எல்லாமே சென்ற நிலையில் அந்த வயர்களை எல்லாம் உடனடியாக அகற்றினர். ஆபத்தான கம்பத்தையும் அப்புறப்படுத்தினர். இது தொடர்பான புகைப்படங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. இதை பார்த்த புகார் கொடுத்த நபர் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
சென்னையில் மட்டுமல்ல, எங்கு இதுபோல் பிரச்சனை என்றாலும் மின்வாரியம் ட்விட்டரில் உடனே பதில் அளிக்கிறது. உங்கள் வீட்டில் மின்சாரம் வரவில்லை என்றாலும், உங்கள் பகுதியில் மின்சாரம் இல்லை என்றாலும் உடனே பதில் அளித்து நடவடிக்கை எடுக்கிறது மின்சார வாரியம். நீங்கள்வேண்டுமானாலும் முயற்சித்து பாருங்கள்.












Click it and Unblock the Notifications