ஃபேன், லைட், ஸ்விட்சுகளை ஈரத்துடன் தொடக்கூடாது.. தமிழக மின்சார வாரியம் தந்த மழைக்கால மேஜர் அட்வைஸ்
சென்னை: சென்னை: மழைக்காலங்களில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை மின்வாரியம் வெளியிட்டிருக்கிறது. வீட்டின் உட்புற சுவர் ஈரமாக இருந்தால் மின்சார சுவிட்சுகள் எதையும் இயக்கக் கூடாது என்றும், மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் உபயோகிக்கக் கூடாது என்றும் மின்சாரம் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, வலுப்பெற்று ஃபெங்கல் புயலாக மாறியிருக்கிறது... இந்த புயல் இன்று பிற்பகல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையைக் கடக்கவிருக்கிறது.

ரெட்அலர்ட்: இதனால் இன்றைய தினம் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், வானிலை மையம் விடுத்திருக்கிறது.. இந்த புயல் காரணமாக, வட தமிழக கடலோரப் பகுதிகளில் தரைக் காற்று 70 கி.மீ வேகத்தில் வீசும் என்றும், புயல் கரையைக் கடக்கும்போது 90 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த 3 நாட்களான நவம்பர் 30, டிசம்பர் 1,2 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
அறிவுறுத்தல்: இந்நிலையில், மழைக்காலங்களில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டிருக்கிறது.. ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம் என்றும், வீட்டில் மின்சாரம் இல்லையென்றால் தாங்களாகவே அருகில் இருந்து ஒயர் மூலம் மின்சாரம் எடுக்க வேண்டாம் என்றெல்லாம் அறிவுறுத்தியிருக்கிறது. மின்சார வாரியம் பொதுமக்களின் நன்மையை கருதி வெளியிட்ட அறிவுரைகள் இவைகள்தான்:
* ஈரமான கைகளில் மின் சுவிட்சுகள், மின்சாதனங்களை இயக்க முயச்சிக்க வேண்டாம்.
* வீட்டில் மின் சுவிட்சுகளை ஆன் செய்யும் போது கவனத்துடன் இயக்கவும்.
* வீடுகள் மற்றும் கட்டிடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதை தவிர்க்க வேண்டும்.
* வீட்டின் உள்புற சுவர் ஈரமாக இருந்தால் மின் சுவிட்சுகளை இயக்கக் கூடாது.
* நீரில் நனைந்த பேன், லைட் உள்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க வேண்டாம்.
* மின்மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் உபயோகிக்க கூடாது.
* வீட்டில் மின்சாரம் இல்லை என்றால், அருகில் இருந்து தாங்களாகவே ஒயர் மூலம் மின்சாரம் எடுக்க வேண்டாம்.
* மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள், பில்லர் பாக்சுகள் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.
* சாலைகளிலும், தெருக்களிலும் மின்கம்பங்கள் மற்றும் மின் சாதனங்களுக்கு அருகே தேங்கி கிடக்கும் தண்ணீரில் நடப்பதோ, ஓடுவதோ, விளையாடுவதோ மற்றும் வாகனத்தில் செல்வதோ தவிர்க்கப்பட வேண்டும்.
* தாழ்வாக தொங்கிக் கொண்டிருக்கும் மின் ஒயர்கள் அருகில் செல்வதையும், தொடுவதையும் தவிர்க்க வேண்டும்.
* மின் கம்பத்திலோ அல்லது அதற்காக போடப்பட்டு உள்ள ஸ்டே வயரின் (stay wire) மீதோ கொடி கயிறு கட்டி துணி காய வைக்க வேண்டாம்.
* மின் கம்பத்திலோ அல்லது அவற்றை தாங்கும் கம்பங்களிலோ கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம்.
* மின் சேவைகள் மின் கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ, மின் கம்பங்கள் உடைந்திருந்தாலோ, சாய்ந்திருந்தாலோ மற்றும் மின்தடை குறித்த புகார்களுக்கு உடனடியாக 24 மணி நேரமும் செயல்படும் மாநில நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தை 94987 94987 தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிரடி உத்தரவு: வாடிக்கையாளர்களின் தேவைகள், புகார்களை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என்று மின்துறை ஊழியர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போது மழைக்காலம் என்பதால், அனைத்து அதிகாரிகளும் தங்களின் செல்போனை எந்த காரணம் கொண்டும், ஆப் செய்து வைக்கக்கூடாது என்றும் இதை மீறுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி சில தினங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications