தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு ட்விட் போட்டது குத்தமா.. உடனே ஓடி வந்த நெட்டிசன்.. நல்ல பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (டுவிட்டர்)தளத்தில் மின் மாற்றி அருகில் செல்ல வேண்டாம் என்று அறிவுரை கூறியிருந்தது. இதற்கு கீழ் நெட்சன் ஒருவர், எல்லாம் சரி, நொறுங்கி கிடக்கும் மின்மாற்றியை எப்ப சார் மாற்றுவீங்க என்று கேட்டு அதிர வைத்தார். அதற்கு மின் வாரியம் உடனே பதில் அளித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் பொதுவாக உங்கள் ஏரியாவில் மின்சாரம் இல்லை என்றாலும் சரி, உங்கள் பகுதியில் மின்மாற்றிகள் செயல்படவில்லை என்றாலும் சரி, எக்ஸ் தளத்தில் கோரிக்கை வைத்தால் உடனே நடவடிக்கை எடுக்கிறது.

TANGEDCO reply after important post about transformer in trichy

இதேபோல் மின்சார கம்பங்கள், மின்சார லைட்டுகள், மின் வயர்கள் ஆபத்தான முறையில் இருக்கிறது என்றாலும் சரி, எக்ஸ் தளத்தில் (டுவிட்டரில் ) சொன்னால் உங்கள் முழு தகவலையும் வாங்கி கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் பலரும் மின்வாரியம் தொடர்பான புகார்களை ட்விட்டரில் அளித்து வருகிறார்கள். மின் கட்டணம் தொடங்கி, புதிய மின் இணைப்பு வரை பல பிரச்சனைகளுக்கு மின் வாரியம் ட்விட்டரில் பதில் அளித்து நிவர்த்தி செய்து வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம், மின் விநியோக சாதனங்கள் குறித்து அடிக்கடி விழிப்புணர்வு கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகிறது.. அந்த வகையில் மின்மாற்றி குறித்தும் இன்று பதிவிட்டிருந்தது. அந்த பதிவில், "மின் கட்டமைப்பிலிருந்து உயர் மின் அழுத்த மின்சாரத்தை, உங்கள் வீடு, கட்டிடங்களில் பயன்பாட்டு சாதனங்களை இயக்கும் அளவிற்கு குறைத்து மாற்றி வழங்கும் ஒரு சாதனமாகும். பெரும்பாலும் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள மின்கம்பங்களிலோ, அதிக மக்கள் வசிக்கும் கட்டிடங்களின் அருகாமையில் நிறுவப்பட்டிருக்கும்.
நமக்கு மின்சாரம் வழங்கும் மின் மாற்றி அருகில் செல்வதையோ , குப்பை போடுவதையோ, தவிர்ப்போமா!" என்று கூறியிருந்தது.

இந்நிலையில் எல்லாம் சரிதான் சார்.. எங்க ஊரில் உள்ள பழுதான மின்மாற்றியை மாற்றச்சொல்லி பல நாள் ஆச்சு.. எப்ப சார் மாற்றுவீங்க என்ற ரீதியில் நெட்சன் ஒருவர் அதற்கு கீழ் கமெண்ட் போட்டு அதிர வைத்தார். அவர் தனது பதிவில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே , ஆங்கரை - பண்பரம்சுற்றி அய்யன் வாய்க்கால் கரை செல்லும் சாலையில் நொறுங்கிய நிலையில் மின்மாற்றி ஒன்று உள்ளது. எத்தனை முறை கூறினாலும் அதிகாரிகள் மாற்றுவது இல்லை.. அருகில் மூன்று குடியிருப்புகள் உள்ளன. எப்போது தான் மாற்றுவீர்கள்" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த ட்விட்டிற்கு பதில் அளித்துள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், உங்கள் கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அடுத்தாக போட்ட ட்வீட்டில், உங்கள் பெயர், மின்இணைப்பு எண், முகவரி உள்ளிட்ட முழுதகவலையும் தாருங்கள் எனறு கேட்டது. அவரும் தகவல்களை அளித்தார். நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என்று மின்வாரியம் அவருக்கு உறுதி அளித்தது.இது ஒரு சாம்பிள் தான், இதுபோல் பல ட்விட்டர் கோரிக்கைக்கு மின் வாரியம் பதில் அளித்து நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுவாக நம் மக்களுக்கு குறைகளை நிவர்த்தி செய்வது ஒருபுறம் எனில், அந்த குறையை பொறுமையாக கேட்டு பதில் அளிக்க வேண்டும்.. அதுதான் அவர்களின் முதல் எதிர்பார்ப்பு.. அதனை தற்போது மின்சார வாரியம் ட்விட்டரிலயே நிவர்த்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+