மின்வாரியம் திடீர் அதிரடி.. "கரண்ட் பில்லில்" வருது மாற்றம்.. "ஷாக்' மேட்டர்.. தமிழக அரசின் முடிவு?
சென்னை: ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தில் தமிழக அரசு முனைப்பு காட்டி வரும்நிலையில், புது பிரச்சனை ஒன்று கிளம்பி உள்ளது. இதுகுறித்து அரசுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. என்ன நடந்தது?
நாடு முழுவதும் மின் இணைப்புகளின் பயன்பாட்டை கணக்கிட ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.. மத்திய அரசின் உதவியுடன் மாநில அரசுகளும் இதை செயல்படுத்தும் முனைப்பில் இறங்கி உள்ளன.

அதன்படி தமிழக அரசும் இதில் முனைப்பு காட்டி வருகிறது. அனைத்து இணைப்புகளுக்கும் மின்மீட்டர் பொருத்தும் செலவினை தமிழ்நாடு அரசு ஏற்கும் என்றும் கூறியுள்ளது..
மின்வாரியம்: மின் வாரியத்தில் உள்ள செலவினங்களை குறைக்கவும், மின் பயன்பாட்டில் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மை இருக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அரசு கூறியுள்ளது.
தமிழக அரசு இப்படி ஒரு திட்டத்தை அறிவிக்கவும், பொதுமக்களும் இதற்கு ஆதரவு தந்து வருகிறார்கள்.. காரணம், சமீபகாலமாகவே, மின் மீட்டர்களில் ரீடிங் எடுப்பதில் குளறுபடிகள் நடப்பதாகவும், பல இடங்களில் கணக்கெடுப்பு பணியில் தாமதம் ஏற்படுவதாகவும், பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். 2 மாதத்தையும் தாண்டி கணக்கெடுக்கப்படுவதால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதாயிருப்பதால், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை, தமிழக அரசு விரைந்து வேகப்படுத்த வேண்டும் என்றும் கேட்டு வருகிறார்கள்.
டெண்டர்கள்: அதன்படியே, ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழக அரசும் கையில் எடுத்தது.. இதற்காக டெண்டர்களும் கோரப்பட்டுள்ள நிலையில், பணிகள் துரிதமாகி உள்ளன.
பயன்கள்: இந்த ஸ்மார்ட் மின் மீட்டரில் மின் பயன்பாடு தேதி, மென்பொருள் வடிவில் பதிவேற்றம் செய்யப்படும்.. பிறகு தொலைத்தொடர்பு வசதியுடன் அலுவலக "சர்வர்" உடன் இணைக்கப்படும். இதனால் மின் பயன்பாட்டை தானாகவே ஸ்மார்ட்' மீட்டர் துல்லியமாக கணக்கெடுத்துவிடும். அதனால், ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று கணக்கு எடுக்க வேண்டியதில்லை.. கட்டண விவரமும் SMS மூலம் நுகர்வோருக்கு அனுப்பப்பட்டுவிடும்.
அதனால்தான், பொதுமக்கள் ஸ்மார்ட் மீட்டரை வீடுகளில் பொருத்த வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள். ஆனால், இந்த இந்த மின்மீட்டர் திட்டத்தினால் தமிழ்நாடு மின்வாரியத்தில் 15,000 பேர் வரையில் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால், அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு மின்வாரிய பணியாளர்கள் கூட்டமைப்பு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் சேக்கிழார் கோரிக்கை விடுத்துள்ளார்.

நிதிச்சூழல்: அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஸ்மார்ட் மீட்டர்களை செயல்படுத்துவது மதிப்பீட்டாளர்கள், வருவாய் மேற்பார்வையாளர்கள், மதிப்பீட்டு ஆய்வாளர்கள் உட்பட சுமார் 15,000 தொழிலாளர்களின் வேலையை கேள்விக்கறியாகிஉள்ளது. இவர்களின் வேலைக்கான உத்தரவாதத்தை மின்வாரியமோ, அரசோ இதுவரை அளிக்கவில்லை. நிதிச்சூல் சரியில்லாத நேரத்தில், ஸ்மார்ட் மீட்டருக்காக அரசு பெருமளவில் செலவு செய்வது பல கேள்விகளை எழுப்புகிறது.
மின்துறை தனியார்மய்மாக்கப்படலாம் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த திட்டத்தை செயல்படுத்த கேரள அரசு மத்திய அரசிடம் கூடுதல் அவகாரம் கோரியுள்ளது. மேலும் கேரள அரசை போன்று மின் ஊழியர்களுக்கு வேலை உத்தரவாதத்தை தமிழ்நாடு அரசு அளிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
நம்பிக்கை: இதனிடையே, ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தினால், மின்வாரிய ஊழியர்களுக்கு, மாற்று வேலை வழங்குவது குறித்து வாரியம் பரிசீலிக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் நம்பிக்கை தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழ்நாட்டில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட புதிய டேட்டா -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்!











Click it and Unblock the Notifications