சாய்த்த ஸ்டாலின்.. அடுத்த விக்கெட்.. அந்த "மாஜி" திமுகவில் இணைகிறாராமே.. நாளைக்கே?.. அதிமுக குழப்பம்
திமுகவில் மாஜி அதிமுக எம்பி இணைய உள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: அடுத்த விக்கெட் சாய போகிறது.. முன்னாள் அதிமுக எம்பியான இவர் இன்றே திமுகவில் இணையலாம் என்று சொல்லப்படுகிறது.
Recommended Video
நாளுக்கு நாள் திமுகவின் செல்வாக்கு உயர்ந்து கொண்டிருக்கிறது.. அதிமுகவோ சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.. உட்கட்சி பூசலை சமாளிக்கவே அவர்களால் முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
மற்றொரு பக்கம் சசிகலாவின் வருகையானது மேலும் கலக்கத்தை கூட்டி உள்ளது.. இதனால் நிர்வாகிகள் எந்த பக்கம் போவது என்று தெரியாமல் விழித்து வருகின்றனர்.

நம்பிக்கை
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின்போது, எப்படியாவது நம்மை தோற்கடிக்க விடாமல் பாஜக அரசு பார்த்து கொள்ளும் என்று எடப்பாடி பழனிசாமி அனைவருக்கும் நம்பிக்கை தந்துள்ளார். அதனால்தான் சசிகலா ஆதரவாளர்களான பலரும் சசிகலாவை சென்று சந்திக்காமல், எடப்பாடிக்காக விசுவாசம் காத்தனர். ஆனால், இப்படி மண்ணை கவ்வியது எடப்பாடிக்கே ஷாக்தான்.

அதிருப்தி
அதனால் அதிருப்தியாகி உள்ளவர்களில் பாதி பேர் சசிகலா பக்கம் தாவுகின்றனர்.. மீதம் உள்ளவர்கள் திமுக பக்கம் மாறி வருகின்றனர்.. அந்த வகையில் பெரும்பாலான கொங்கு பிரமுகர்கள் திமுகவில் சேர்ந்தும் வருகின்றனர்.. இப்போது தஞ்சையில் இருந்து இன்னொரு புள்ளி இணைய போகிறார்.. அதிமுக முன்னாள் எம்பி கு.பரசுராமன்தான் அவர்.

தஞ்சாவூர்
தஞ்சாவூர் திமுக மாவட்ட அலுவலகத்தில் திமுக நிர்வாகிகளை அதிமுக முன்னாள் எம்.பி. கு.பரசுராமன் சந்தித்துள்ளார்... தஞ்சை எம்பி தொகுதியின் கடந்த 2014 முதல் 2019 வரை எம்பியாக இருந்தவர்தான் கு.பரசுராமன். இவர், அதிமுகவில் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராகவும் உள்ளார். அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கத்தின் நெருங்கிய ஆதரவாளராக இருந்தார்.

சீட்
2014-ல் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் வைத்திலிங்கம் சிபாரிசில் சீட் வாங்கி பரசுராமன் வெற்றி பெற்றார். இதையடுத்து, 2019-ம் ஆண்டு மறுபடியும் அதிமுகவில் போட்டியிட வாய்ப்பு கேட்டபோது, தஞ்சாவூர் தொகுதியை தமாகாவுக்கு ஒதுக்கீடு செய்ததில், வைத்திலிங்கத்தின் பங்கு அதிகமாக இருந்ததாக கூறப்பட்டது.

பரசுராமன்
இதைத் தொடர்ந்து, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட கு.பரசுராமன் வாய்ப்பு கேட்டிருந்தார்... ஆனால் தரவில்லை.. அதுவரை உறுதியாக சீட் தருவதாக சொன்னவர்கள், கடைசி நேரத்தில் அறிவுடைநம்பிக்கு சீட் தந்துவிட்டார்கள்.. இதனால் ஷாக் ஆன பரசுராமன், தேர்தல் நேரத்தில் எந்தவித களப் பணியாற்றாமல் ஒதுங்கியே இருந்தார்... இதனால் வைத்திலிங்கத்துக்கும் பரசுராமனுக்கும் இடையே நட்பில் விரிசல் ஏற்பட்டது.

பரபரப்பு
இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த 21-ம் தேதி இரவு செய்தியாளர்களை திடீரென சந்தித்தார் கு.பரசுராமன்.. அப்போது, திமுகவின் தலைவர் ஸ்டாலினை புகழ்ந்து ஆட்சி சிறப்பாக உள்ளது என்றார்... ஒரு மாஜி அதிமுக எம்பி இப்படி ஸ்டாலினை பாராட்டியது பெரும் பரபரப்பை கூட்டியது.. மீடியாக்களிலும் பெருத்த விவாதமானது.. இந்நிலையில், நேற்றைய தினம் பரசுராமன் தனது ஆதரவாளர்களோடு தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்துக்கு வந்தார்.

திருவையாறு
அங்கு மாவட்ட செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவுமான துரை.சந்திரசேகரன், ஒரத்தநாடு முன்னாள் எம்எல்ஏ எம்.ராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து அரை மணி நேரம் பேசினார்... திமுக ஆபீசுக்கு பரசுராமன் வந்தது மேலும் சந்தேகத்தை கிளப்பியது.. திருவையாறு எம்எல்ஏ தலைமையில் திமுகவில் சேருவதற்காக மாவட்ட செயலாளரிடம் நேரம் கேட்டுதான் கட்சி ஆபீசுக்கு பரசுராமன் தனது ஆதரவாளரோடு வந்ததாக தகவல் வெளியானது.. விரைவில் ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக மாஜி எம்பி திமுகவில் இணையவுள்ளார்.. அது நாளைக்கே கூட இருக்கலாம்.. அல்லது இன்றைக்கேகூட இருக்கலாம் என்கின்றனர்.
-
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
‘வாட்ச்' கொடுத்த திமுக.. அண்ணா அறிவாலய மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ‘ஜாக்பாட்' -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டிருந்தால் இன்று நிலைமையே வேறு.. நாங்க ஏமாந்துட்டோம்! எவ வேலு -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்!












Click it and Unblock the Notifications