சிறுமி தான்யாவிற்கு அடுத்த ஹேப்பி நியூஸ்.. படிப்பு செலவை அரசே ஏற்கும்- அமைச்சர் நாசர் அறிவிப்பு
சென்னை: முக சிதைவுக்கு சிகிச்சைளிக்கப்பட்ட சிறுமி டான்யாவின் படிப்பு செலவை அரசை ஏற்கும் என்று அமைச்சர் நாசர் கூறியுள்ளார். சிறுமி குடும்பத்திற்கு இலவச வீடு வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த ஆவடியை சேர்ந்த 9 வயது சிறுமி டான்யா, அரியவகை முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தது குறித்து செய்தி வெளியானது. இதையடுத்து, சிகிச்சை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து, கடந்த 23ம் தேதி சிறுமி தான்யாவுக்கு தனியார் மருத்துவமனையில் முக சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பூரண நலமடைந்த டான்யா இன்று மகிழ்ச்சியுடன் வீடு திரும்பியுள்ளார்.

சிறுமி டானியா
கடந்த 29ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். 21 நாட்கள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு தண்டலம் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறுமி டானியா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பால்வளத்துறை அமைச்சர் நாசர், ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் சிறுமி டான்யாவை வீட்டுக்கு பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

டானியா டிஸ்சார்ஜ்
முக தசை சிதைவுக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஆவடி சிறுமி டானியா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சிறுமி டானியா இன்று டிஸ்சார்ஜ் ஆன நிலையில் அமைச்சர் நாசர், திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பூங்கொத்து அளித்து சிறுமியை வாழ்த்தினர்.

படிப்பு செலவை அரசே ஏற்கும்
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நாசர் , முக சிதைவுக்கு சிகிச்சைளிக்கப்பட்ட சிறுமி டான்யாவின் படிப்பு செலவை அரசை ஏற்கும். சிறுமி குடும்பத்திற்கு இலவச வீடு வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்றார். இந்த நிலையில், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சிறுமி டான்யாவை அமைச்சர் நாசர், ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பூங்கொத்து அளித்து வீட்டுக்கு பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

டான்யா மகிழ்ச்சி
புதிதாக பிறந்தது போல மறுவாழ்வு கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறார் டான்யா. செய்தியாளர்களிடம் பேசிய சிறுமி டான்யா, இனி என்னை யாரும் ஒதுக்கமாட்டார்கள். ஜாலியாக பள்ளிக்கு செல்வேன். அறுவை சிகிச்சையின் மூலம் தன் கன்னம் சரியானது மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய டான்யா சிகிச்சை அளிக்க உதவிய முதலமைச்சருக்கு நன்றி எனவும் தெரிவித்தார். நான் பள்ளிக்கு சென்று நன்றாக படித்து முதலமைச்சரின் நம்பிக்கையை காப்பாற்றுவேன் என்றும் கூறினார்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications