டாஸ்மாக் வீசிய வெடி.. 3 நாட்களுக்கு டாஸ்மாக் இயங்காது.. நேற்றே குவிந்த குடிமகன்கள்.. தள்ளுமுள்ளு வேற
சென்னை: தமிழ்நாடு அரசு, டாஸ்மாக் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில், கன்னியாகுமரியிலும் இன்று முதல் டாஸ்மாக் 3 நாட்களுக்கு மூடப்படுகிறது. இது குடிமகன்களுக்கான அறிவிப்பாகவும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் செப்டம்பர் 28 மற்றும் அக்டோபர் 2ம் ஆகிய 2 நாட்களிலும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

கடும் நடவடிக்கை: இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகையான மிலாடி நபி செப்டம்பர் 28ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதேபோல காந்தி ஜெயந்தி அக்டோபர் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த 2 நாட்களும் அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ளது.
இதையடுத்து, தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மேற்கண்ட 2 நாட்களில் மூட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி, யாராவது மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
கலெக்டர் அறிவிப்பு: இதனிடையே கன்னியாகுமரி மாவட்டத்திலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் முக்கிய அறிவிப்பு ஒன்றினை அறிவித்துள்ளார்.
அதில், "விநாயகர் சதுர்த்தி விழா கன்னியாகுமரி மாவட்டத்தில் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த சிலைகள் விஜர்சனத்திற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.
3 நாட்களுக்கு லீவு: இதனை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் ஊர்வலம் நடை பெறும் பகுதிகளில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக் கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவை நாளை (22-ந் தேதி) முதல் 3 நாட்கள் செயல்படாது" இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், இன்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடப்படுகிறது.. இந்த இதையடுத்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் குறிப்பிட்ட கடைகளில் நேற்றிரவே குடிமகன்கள் கைநிறைய பாட்டில்களை வாங்க குவிந்துவிட்டார்கள்..
குடிமகன்கள்: சில கடைகளில் கூட்ட நெரிசலால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.. பலரும் கார்களிலும், பைக்குகளிலும், மதுபானங்களை வாங்கி அள்ளி போட்டுக் கொண்டு போனார்கள்.. 3 நாட்களுக்கு கடைகள் இருக்காது என்பதால், ஸ்டாக் வைத்து கொள்வதில் நேற்று பிற்பகலில் இருந்தே குடிமகன்கள் பிசியாகிவிட்டார்கள்.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளைக் கடலில் கரைக்கும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதால், கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போலீசார் ஆங்காங்கே தீவிர கண்காணிப்பு பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications