டாஸ்மாக் அதிரடி.. மொத்தமா மாறிடும் போலயே.. காலி மதுபாட்டிலுக்கு ரூ.10.. தமிழக அரசின் சூப்பர் திட்டம்
சென்னை: காலி மது பாட்டில்களை திரும்ப பெறுவது, மேலும் 5 மாவட்டங்களில் அதிரடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது.. தமிழக அரசின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் தரப்பில் பெரும் ஆதரவும், வரவேற்பும் கிடைத்து வருகிறது.
10 ரூபாய் கூடுதலாக கொடுத்து, மதுபான பாட்டில் வாங்கிவிட்டு, அந்த காலி பாட்டில்களை டாஸ்மாக் கடைகளிலேயே திரும்ப ஒப்படைக்கும்போது, 10 ரூபாயை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்ற திட்டம் மலைப்பகுதி டாஸ்மாக் கடைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வனப் பகுதிகள் மற்றும் மலைப்பிரதேசங்களை தூய்மையாக வைத்துக்கொள்ளவும், பாட்டில்கள் குத்தி வனவிலங்குகள் பாதிக்கப்படுவதை தடுக்கவுமே, இப்படியான புதிய முறை செயல்படுத்தப்படுகிறது.
ஹைகோர்ட்: இதனிடையே, டாஸ்மாக் பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும் என சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டது... இதையடுத்து, காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தினை விரிவுபடுத்த டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டது.. அதன்படியே, ஜனவரி 19ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
குறிப்பாக, திருவாரூர், நாகை, குமரி, தேனி, தருமபுரி மாவட்ட டாஸ்மாக் கடைகளில், மதுபான விலையுடன் கூடுதலாக ரூ.10 பெற்றுக் கொள்ளப்படும் என்றும், இங்கெல்லாம் காலி மது பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் மீண்டும் ஒப்படைத்து, கூடுதலாக கொடுத்த 10 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
நன்மைகள்: சுற்றுச்சூழலுக்கு நன்மை விளைவிக்கும் தமிழக அரசின் இந்த முடிவுக்கு பொதுமக்கள் தரப்பில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.. இதையடுத்து, திருவாரூர், நாகை, தர்மபுரி, தேனி, கன்னியாகுமரி என மேலும் 5 மாவட்டங்களில், காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த அதிரடி காரணமாக, பாட்டில் கழிவுகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலங்குகளின் நலனும் காக்கப்படும் என்று நம்பப்படுகிறது. இதுஒருபுறம் இருந்தாலும், குடிமகன்கள் இதற்கு அதிருப்தி அடைந்துள்ளனர்.. ஏற்கனவே டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு குவார்ட்டர் மது பாட்டிலுக்கும் கூடுதலாக 10 ரூபாய் வாங்கப்படும் நிலையில், மேலும் 10 ரூபாயா? என்று புலம்புகிறார்கள்.
போராட்டம்: அதுபோல, காலி மதுபாட்டிலுக்கு ரூ.10 வழங்கும் திட்டத்துக்கு தர்மபுரி, அரூர் பகுதிகளில் - டாஸ்மாக் ஊழியர்கள் விற்பனையாளர்கள் தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர். டாஸ்மாக் விற்பனையாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரணம், மதுபான பாட்டில்களை வாங்கிய அதே நாளில், அதே கடையில் கஸ்டமர்கள் திருப்பிக்கொடுத்து ரூ.10 பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.. இது தொடர்பாக வாடிக்கையாளர்களுடன் தேவையற்ற மோதல் ஏற்படுகிறது. மேலும், மது பாட்டில்கள் மீது இதற்காக ஸ்டிக்கர் ஒட்டுவது, மார்க்கர் பேனா மூலம் குறியிடுவது போன்ற பணிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
காலி பாட்டில் : இது தவிர, காலி பாட்டில்களை வாங்கி இருப்பு வைக்க போதிய இட வசதி, ஆள் பற்றாக்குறை பிரச்சினையும் உள்ளது. இதற்கான வசதிகளை செய்து தராமல் இந்த நடைமுறையை உடனடியாக பின்பற்றும்படி சொல்வதை ஏற்க முடியாது என்றனர். எனினும், இந்த பிரச்சனைக்கு 10 நாளில் தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் உறுதி தந்ததன்பேரில் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ரூ.10375 தான் சம்பளம்: டாஸ்மாக் ஊழியர் அமைச்சர் முஸ்தபாவிடம் பேசிய வீடியோ.. எதார்த்தம் என்ன -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications