சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்று முதல் டாஸ்மாக் ஓபன்.. சென்னை மக்கள் மதுபானம் வாங்கச் சென்றால் ஜெயில்தான்.. போலீஸ் வார்னிங்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையை சுற்றி உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு சென்று சென்னைவாசிகள் மதுவாங்க கூடாது, மீறிச் சென்றால் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை எச்சரித்துள்ளது.

Recommended Video

    TASMAC TIMING TROLL | MAHADHI TROLL | ONEINDIA TAMIL

    சென்னை காவல்த் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று முதல் டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபான விற்பனை துவங்க உள்ளது.

    Tasmac: Chennai people will get arrested if they are trying to buy liquor bottles

    இந்த நிலையில் தமிழக காவல்துறை வடக்கு மண்டல ஐ.ஜி.நாகராஜன் அளித்த பேட்டியில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் வசிப்பவர்கள் வசிப்பிட அடையாள அட்டையுடன்தான் சென்று மது வாங்கலாம். சான்று இல்லாதவர்களுக்கு டாஸ்மாக்கில் மது கிடைக்காது. சென்னையில் இருந்து சென்று மது வாங்க முயற்சித்தால் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் பாதுகாப்பு பணியிலிருந்த பெண் போலீசுக்கு கொரோனா.. பரபரப்புமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் பாதுகாப்பு பணியிலிருந்த பெண் போலீசுக்கு கொரோனா.. பரபரப்பு

    சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால், அரசு திடீரென சென்னையில் மட்டும் மது விற்பனை செய்யும் முடிவை நிறுத்தி வைத்துள்ளது. அரசின் வருமானத்தை உயர்த்தும் நோக்கத்தோடு மதுபானங்களின் விலையை ஓரளவுக்கு தமிழக அரசு உயர்த்தி நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

    English summary
    Chennai people will get arrested if they are trying to buy liquor bottles from Tasmac from nearby districts, says police.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X