டாஸ்மாக் அதிரடி.. தமிழக அரசின் அடுத்த நடவடிக்கை.. கடைகளில் சிசிடிவி கேமராக்கள் மீண்டும் பொருத்தமா?
சென்னை: தமிழக டாஸ்மாக் கடைகளில் ஏற்படும் கொள்ளைகளை தடுக்க, தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சிசிடிவி கேமராக்கள் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
மரக்காணம் கள்ளச்சாராய விவகாரத்தில், திமுக அரசு மீது, தமிழக மக்களுக்கு பெருத்த கவலை ஏற்பட்டதையடுத்து, டாஸ்மாக் விவகாரத்தில், தமிழக அரசு முன்னெடுத்து வரும் ஒவ்வொரு அறிவிப்பும், தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்து வருகிறது.
அந்தவகையில், 2 மாதங்களுக்கு முன்பு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "குடி மற்றும் போதை பழக்க பாதிப்புக்குள்ளானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஆலோசனை, வழிகாட்டுதல் முறையிலும், மனோதத்துவ முறையிலும், மருத்துவ முறை சிகிச்சையுடன் கூடிய மறுவாழ்வு சேவைகள் அளிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

போதைப்பழக்கம்: மேலும், போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு 15 நாட்கள் அவர்கள் பகுதியிலேயே தங்கி இருந்து சிகிச்சை வழங்கப்படும் என்றும் குடிப்பழக்கத்தில் இருந்து முழுமையாக மீண்ட பிறகு வேலைக்கான தகுதி இருந்தால், அரசு பணியில் கல்வி தகுதிக்கு ஏற்ப அவர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதேபோல, அமைச்சர் முத்துசாமி, செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழகத்தில் மது விற்பனையை குறைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு... டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களின் பணிப்பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை மூலம் மதுக்கடை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியிருந்தார்.
அறிவிப்புகள்: இப்படியான அறிவிப்புகள் ஒருபக்கம் வெளிவந்தாலும், டாஸ்மாக்குகளில் நடைபெறும் கொள்ளையை தடுக்கவும் தமிழக அரசின் நடவடிக்கைகள் தீவிரமாகி வருகின்றன.. அந்தவகையில், ஏற்கனவே, டாஸ்மாக் கடைகளில் கொலை, கொள்ளை மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் அதிகம் நடப்பதால்தான், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு, டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த தமிழக அரசு முடிவு செய்திருந்தது.
அதன்படி 2 வருடங்களுக்கு முன்பு முதற்கட்டமாக, ஒரு டாஸ்மாக் கடைக்கு 2 கேமராக்கள் வீதம் மொத்தம் 3,000 கடைகளில் 6,000 கேமராக்களை பொருத்த தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.
கண்காணிப்பு: அந்தவகையில், தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் 4820 மதுக்கடைகளை நடத்தும் நிலையில், கொள்ளை சம்பவங்களை தடுக்க, 3,000 டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், மேலும் 500 கடைகளுக்கு கேமராக்கள் பொருத்த ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், டாஸ்மாக்குகளில் நடைபெறும் கொள்ளைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று நம்பப்படுகிறது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications