தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் அடியோடு மாறும் மதுபானங்களின் விலை
சென்னை: தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் மதுபானங்கள் விலை குவாட்டருக்கு 10 முதல் 20 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
தமிழக அரசின் வருவாயில் மதுபான விற்பனையில் கிடைக்கும் வருவாய் முக்கியமானது. இந்த ஆண்டு 450000 கோடி அளவிற்கு வருவாய் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினசரி சராசரியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் மதுவிற்பனையாகும் நிலையில், திருவிழா, தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்பட பல்வேறு பண்டிகை காலங்களில் டாஸ்மாக் மது விற்பனை மிகப்பெரிய அளவில் வசூலாகும்.

தமிழகத்தில் தற்போது 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளை தமிழ்நாடு வாணிப கழகம் (டாஸ்மாக்) நடத்தி வருகிறது. டாஸ்மாக் கடைகளில் 43 சாதாரண வகை மதுபானங்கள், 49 நடுத்தர வகை மதுபானங்கள், 128 பிரீமியம் வகை பிராண்ட் மதுபானங்கள், 35 வகையான பீர், 13 வகையான ஒயின் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. இது தவிர வெளிநாட்டு மதுபானங்கள் எலைட் டாஸ்மாக் கடைகள் மூலம் பிரத்யேகமாக விற்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் மதுபானங்களின் விலையை டாஸ்மாக் நிர்வாகம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் இன்று தேதி முதல் மதுபாட்டில்களின் மீதான விலை உயர்வை அமல் படுத்துவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது.
மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக குவாட்டர் பாட்டில் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், 180 மி.லி கொண்ட அளவு கொண்ட உயர்ரக குவாட்டர் பாட்டில் விலை ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 650 மி.லி. அளவு கொண்ட பீர் வகைகளின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட விலை உயர்வின் அடிப்படையில் 375மி.லி., 750மி.லி., 1000 மி.லி. கொள்ளளவுகளில் விற்கப்படும் மதுபான ரகங்களும் 500மி.லி., 325மி.லி. கொள்ளளவுகளில் விற்கப்படும் பீர் வகைகளும் அந்தந்த ரகத்துக்கும் மற்றும் கொள்ளளவுக்கும் ஏற்றவாறு விலை உயர்த்தப்பட்டு விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பின் படி, சாதாரண, நடுத்தர ரக மதுபானங்கள் குவாட்டருக்கு ரூ.10-ம், ஆஃப்-க்கு ரூ.20-ம் புல் பாட்டில் ரூ.40-ம் உயருகிறது. இதே போல், உயர் ரக மதுபானங்கள் குவாட்டருக்கு ரூ.20-ம், ஆஃப்க்கு ரூ.40-ம், ஃபுல் பாட்டிலுக்கு ரூ.80-ம் உயரும். ஏற்கெனவே டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கப்படுவது தொடரும் நிலையில், மதுபானங்கள் விலை உயர்வு குடிமகன்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. டாஸ்மாக்கில் மதுபானங்கள் விலை உயர்வு மூலம் 2000 கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications