பூட்டப்படும் டாஸ்மாக் கடைகள்.. குடிகாரர்களுக்கு ஷாக் செய்தி! பாண்டிச்சேரிக்கும் போக முடியாது.!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் டாஸ்மாக் மது கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சித்ரா பௌர்ணமி மற்றும் வன்னியர் சங்க மாநாடு நடப்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியிலும் நாளை நண்பகல் முதல் மதுக்கடைகளை மூட அம்மாநில கலால்துறை உத்தரவிட்டுள்ளது.

12 ஆண்டுகளுக்கு பிறகு மாமல்லபுரத்தில் வன்னியர் சங்க மாநாடு இன்று பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக பாமகவினர் கூறுகின்றனர்.

மாநாட்டுக்கு இன்னும் சில மணி நேரங்ளே நிலையில், விழா குழு தலைவரான அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள், மாவட்ட செயலாளர் இதற்கான இறுதி கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மாநாடு நடைபெறும் நாள் அன்று பொதுமக்கள் இசிஆர், ஓஎம்ஆர் உள்ளிட்ட சாலைகளை பயன்படுத்த வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி கேட்டுக் கொண்டிருந்தார்.

TASMAC Chitra Pournami chennai

இந்நிலையில், பாமக சார்பில் நடத்தவுள்ள சித்திரை முழு நிலவு பெருவிழாவுக்கு அனுமதி வழங்க கூடாது என தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், பாமக மாநாட்டை முன்னிட்டு காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். மாநாட்டுக்கு வருபவர்கள் எந்த ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் எடுத்து வரக்கூடாது. மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் முறையாக காவல்துறையிடம் அனுமதி பெற்று வர வேண்டும். மாநாட்டின் பாதுகாப்புக்காக கூடுதல் போலீஸாரை பணியமர்த்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் வரும் 11ம் தேதி, 21 டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வன்னியர் சங்க மாநாடு இன்று நடைபெற உள்ளதால், இந்த மாநாட்டையொட்டி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வாகனங்கள் மூலம் மகாபலிபுரத்திற்கு வரவுள்ளனர். இதனால் வடமாவட்டங்களில் அனைத்து தேசிய, மாநில நெடுஞ்சாலையோரம் உள்ள டாஸ்மாக் கடைகளை இன்றைய தினம் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலையோர பகுதிகளான கணியம்பாடி-வேலூர் சாலை, சென்னை-பெங்களூரு சாலை, ஒடுகத்தூர்-வேலூர் சாலை, குடியாத்தம்-காட்பாடி சாலை ஆகிய பகுதிகளில் உள்ள 21 டாஸ்மாக் கடைகளை இன்று மூடப்படுகிறது. இதேபோல, செங்கல்பட்டு மாவட்டத்திலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது,

இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,"2025ம் ஆண்டு மே 11ம் தேதி (ஞாயிற்று கிழமை) சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம் திருவிடந்தை கிராமத்தில் நடைபெறுவதை முன்னிட்டு அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து விதமான டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இன்றைய தினம் செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை மதுபானக் கடைகள், பார்கள் மற்றும் அனைத்து மதுக்கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும். அதை மீறி திறந்திருந்தாலோ அல்லது சட்டவிரோதமான இதர வழிகளில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ உரிய சட்ட விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறப்பட்டுள்ளது.

இதேபோல், புதுச்சேரியிலும் இன்று மதுக்கடைகளை மூட கலால்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி கலால்துறை இணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் வெளியிட்டுள்ள உத்தரவில், 'புதுச்சேரியில் உள்ள சாராயம், கள், பார் உள்ளிட்ட அனைத்து மது விற்பனைக் கூடங்களையும் இன்று (மே 11) மதியம் 1 மணி முதல் மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. சித்திரை முழுநிலவு இளைஞர் மாநாடு மாமல்லபுரத்தில் நடைபெற இருப்பதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தவிர்ககும் வகையில் இந்த தடுப்பு நவடிக்கை எடுக்கப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்மணி கிரிவலம் இன்று இரவு தொடங்கி நாளை இரவு வரை நடக்கவுள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கவுள்ள நிலையில், திருவண்ணாமலை தாலுகா மற்றும் நகரப் பகுதிக்கு அருகாமையில் இயங்கி வரும் திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை, மணலூர்பேட்டை சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை, வேங்கிக்கால் புறவழிச்சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை, சமுத்திரம் பகுதியில் உள்ள மதுபான கடை, திருவண்ணாமலை நகரத்தில் இயங்கி வரும் மதுபான கடைகள் அவற்றின் மதுக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+