தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் திறப்பு இல்லை - டாஸ்மாக் மேலாண் இயக்குநர்
சென்னை: தமிழகத்தில் நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகள் திறக்கப்பட்டிருந்தாலும் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படாது என டாஸ்மாக் மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மே 24-ந் தேதி முதல் தளர்வுகள் இல்லாத ஒரு வார முழு லாக்டவுன் அமல்படுத்தப்படுகிறது. இதற்காக இன்று இரவு 9 மணி வரையிலும் நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறந்திருக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மே 24-ந் தேதி முதல் பால், மருந்து கடைகள், நாட்டு மருந்து கடைகள் தவிர மளிகை கடைகள் ,இறைச்சி கடைகள் உள்ளிட்ட எந்த கடையும் ஒரு வாரத்துக்கு இயங்காது என அரசு அறிவித்துள்ளது. மருத்துவ காரணங்கள், இறப்புக்காக மட்டுமே மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ காரணங்களுக்காக மாவட்டங்களுக்குள் பயணிக்க இ பதிவு தேவையும் இல்லை. மேலும் இன்றும் நாளையும் வெளியூர் செல்ல சிறப்பு பேருந்துகள் மட்டும் இயக்கப்படும்.

இந்த நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகள் இன்றும் நாளையும் திறக்கப்படாது என டாஸ்மாக் மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் மதுபான கடைகளை திறந்தால் குடிமகன்கள் பெரும் எண்ணிக்கையில் ஒரே நேரத்தில் கூடும் சாத்தியங்கள் உள்ளன; அதனால் நாளை டாஸ்மாக் மதுபான கடைகள் திறந்து இருக்காது என டாஸ்மாக் மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications