இந்த பிராண்ட் சரக்கை விற்க வேண்டாம்.. மதுபான கடைகளுக்கு உத்தரவிட்ட டாஸ்மாக்! மதுப் பிரியர்கள் ஷாக்!
சென்னை: டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ஒரு குறிப்பிட்ட மதுபானம் ஸ்டாக் இருந்தால் அவற்றை குடோன்களில் ஒப்படைக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மூலம் மதுபான விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மதுபானங்கள் விற்கப்பட்டு வருகின்றன.

எனினும், அனுமதிக்கப்பட்ட நேரம் கடந்தும் மதுபானங்கள் பிளாக்கில் விற்கப்படுவதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. மேலும், 18 வயதைக் கடக்காத சிறுவர்களுக்கும் மது விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
டாஸ்மாக் மதுபானம் தரமில்லாமல் இருப்பதாகவும், மேலும் ஒரு குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக கொடுக்க வேண்டி இருப்பதாகவும் குடிமகன்கள் புகார் தெரிவிக்கின்றனர். டாஸ்மாக் கடைகளை மூடி பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் ஒருபக்கம் இருக்கிறது.
இந்நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகளில் ஒரு குறிப்பிட்ட பிராண்டு பிராந்தி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தால் அவற்றை உடனடியாக சம்பந்தப்பட்ட மதுபான குடோன்களுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என டாஸ்மாக் கடைகளின் ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டுக்குரிய கோல்டன் வாட்ஸ் நம்பர் 1 பிராந்தி விற்பனைக்கு உகந்தது அல்ல என்றும், கடைகளில் ஸ்டாக் இருந்தால் திருப்பி அனுப்புமாறும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்பனைக்கு வரும் மதுபான வகைகள் தர பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். அந்தவகையில், இந்த வகை பிராந்தி தரப் பரிசோதனையில் தோல்வி அடைந்துள்ளதால் அவற்றை விற்பனை செய்ய வேண்டாம் என கூறப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
இதனால், அந்த பிராண்ட் மதுபானத்தை குடித்து வந்த மதுப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனினும், அந்த குறிப்பிட்ட காலகட்டத்திலான அந்த தயாரிப்பு பெரும்பாலும், கடைகளில் இல்லை எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications