உயரே பறக்கும் "டாஸ்மாக்".. பாட்டில் விலை உயருது.. ரூ.10 கிடையாது.. விலையை பாருங்க: தமிழக அரசு அதிரடி
சென்னை: டாஸ்மாக் மதுபானங்களின் விலைகள் உயரக்கூடும் என்ற தகவல்கள் பரபரத்த நிலையில், அதுகுறித்த கூடுதல் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது..
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, மதுவிலக்கு என்பது கனவாகவே போய் கொண்டிருக்கும் நிலையில், மற்றொருபுறம், டாஸ்மாக்குகள் மூலம் கிடைக்கும் வருவாய் அரசுக்கு பெருகி வருகிறது.

நிதி ஆதாரம்: மொத்த நிதி ஆதாரத்தில் 3.ல் ஒரு பங்கு வருமானம், இந்த டாஸ்மாக், மதுக்கடைகள் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் இப்போது மொத்தம் 4829 மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது.. இந்த டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் வருடத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது.
தமிழ்நாடு என்றில்லை, நாட்டின் பல மாநிலங்களின் அதிகப்படியான வரிவருவாய், மதுபானத்தை விற்பதால் வரும் வருமானமாக இருப்பதாக சொல்கிறார்கள். டாஸ்மாக் கடைகளை குறைத்தாகிவிட்டது, டாஸ்மாக் நேரத்தையும் குறைத்தாகிவிட்டது.. ஆனாலும், டாஸ்மாக் கடைகளுக்கு உள்ள கிராக்கி, இன்னமும் அப்படியேதான் இருக்கிறது.
நிதிச்சுமை: இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு, அரசின் நிதிச்சுமையை குறைப்பதற்காகவும், வருவாயை பெருக்குவதற்காகவும், டாஸ்மாக் மதுபானங்கள் விலையை குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த போவதாவும், டாஸ்மாக் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்தன..
குறிப்பாக, பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா போன்ற மதுவகைகளின் விலைகள், குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் விரைவில் உயர போவதாக சொல்கிறார்கள்.. அதோபோல பாட்டில் விலையும் ரூ.30 முதல் ரூ.80 வரை விலை உயர வாய்ப்புள்ளதாக சொன்னார்கள்.
குவார்ட்டர் பாட்டில்: மூலப்பொருட்களின் விலை உயர்வால், மதுபானங்களின் விலையை உயர்த்த வேண்டும் என்று மதுபான ஆலை உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்களாம்.. அதனால்தான், குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் என்ற அளவில் உயர்த்த முடிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்தன.
ஆனால், இந்த விலை உயர்வை எம்பி தேர்தலுக்கு முன்பாகவே நடைமுறைப்படுத்துவதா? அல்லது நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு நடைமுறைப்படுத்துவதா? என்பது தெரியாமல் இருந்தது.
எவ்வளவு விலை:இந்நிலையில், இதுகுறித்த கூடுதல் தகவல் சோஷியல் மீடியாவில் வட்டமடித்து வருகிறது. நேற்று இது தொடர்பான ஆலோசனையை அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர். அப்போது, மது பாட்டிலுக்கான விலை நிர்ணயம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. அந்தவகையில், மதுபானங்களின் புதிய விலை உயர்வு பிப்ரவரி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன..
அதன்படி பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா உள்ளிட்ட சாதாரண மது வகைகளின் விலை குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்கிறது. ஆஃப் பாட்டில் ரூ.20 அதிகரிக்அதிகரிக்கும், முழு பாட்டில் விலை ரூ.40 கூடும்.
கலக்கம்: பிரீமியம் மதுபாட்டில்கள் குவார்ட்டர் பாட்டில் ரூ.20-ம், முழு பாட்டில் ரூ.80 வரை விலை அதிகரிக்கிறது. அனைத்து வகையான பீர் விலை 10 ரூபாய் உயர்வதாக தெரிகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications