டாஸ்மாக் சரவெடி.. இன்னும் கொஞ்ச நாள்தான்.. அடியோடு மாறுது.. ரூ.10 காலி பாட்டிலில்.. தமிழக அரசு சபாஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காலி மது பாட்டில்களை திரும்ப பெறுவது, சில மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

தமிழகத்தின் வனப்பகுதிகளிலும், மலைப்பிரதேசங்களிலும் தூய்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகவும், பாட்டில்கள் குத்தி வனவிலங்குகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகம் டாஸ்மாக் தரப்பில் புதிய முறை செயல்படுத்தப்படுகிறது.

Tasmac Massive announcement and Rs10 for taking back empty liquor bottles extended throughout Tamil Nadu

அதன்படி, ரூ.10 கூடுதலாக கொடுத்து, மதுபான பாட்டில் வாங்கிவிட்டு, அந்த காலி பாட்டில்களை டாஸ்மாக் கடைகளிலேயே திரும்ப ஒப்படைக்கும்போது, 10 ரூபாயை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.. இந்த திட்டமானது, வனவிலங்குகள் நிறைந்த மலைப்பகுதிகளின் டாஸ்மாக் கடைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, டாஸ்மாக் பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை, தமிழகம் முழுவதும் அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டிருந்தது,

டாஸ்மாக்: இதையடுத்து, காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தினை விரிவுபடுத்த டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டு, ஜனவரி 19ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில் திரும்பப்பெறும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

அந்தவகையில், திருவாரூர், நாகை, குமரி, தேனி, தருமபுரி மாவட்ட டாஸ்மாக் கடைகளில், மதுபான விலையுடன் கூடுதலாக ரூ.10 பெற்றுக் கொள்ளப்படும் என்றும், இங்கெல்லாம் காலி மது பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் மறுபடியும் ஒப்படைத்து, கூடுதலாக கொடுத்த 10 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

5 மாவட்டங்கள்: தமிழக அரசின் இந்த முடிவுக்கு பொதுமக்கள் தரப்பிலும் நல்ல வரவேற்பு கிடைக்கவும், திருவாரூர், நாகை, தர்மபுரி, தேனி, கன்னியாகுமரி என மேலும் 5 மாவட்டங்களில், காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில், காலி பாட்டில்களை மதுக்கடையில் கொடுத்தவுடன் 10 ரூபாய் திரும்ப வழங்கப்படும் திட்டத்தை தமிழகம் முழுவதும் அனைத்து மதுக்கடைகளிலும் ஏப்ரல் முதல் செயல்படுத்தும் பணியில் டாஸ்மாக் ஈடுபட்டுளது...

அந்த அடிப்படையில் சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு 7 மாவட்டங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த டெண்டர் விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

டெண்டர் எடுக்கின்றவர்கள் காலி பாட்டில்களை திரும்ப பெற்று மறுபடியும் பயன்படுத்த மொத்தமாக மதுபான தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கும்.. டாஸ்மாக் மதுக்கடைகளில் திரும்ப கொடுக்கப்படும் ஒவ்வொரு காலி பாட்டில்களுக்கும் ரூ.10 வழங்கப்படும்.

வரவேற்பு: ஒப்பந்த நிறுவனங்கள் வழியாக இந்த மதுபாட்டில் திரும்ப பெறப்படும்வகையில், டெண்டர் விடப்பட்டுள்ளதாக தெரிகிறது.. இந்த டெண்டருக்கான இறுதி நாள் வரும் 28-ந்தேதியாகும்.. டெண்டர் இறுதி செய்யப்பட்டு அதற்கு பிறகே, ஏப்ரல் முதல் காலி மதுபாட்டில் திரும்ப பெறப்படும் திட்டம் தமிழகம் முழுவதும் ஆரம்பமாகும் என்கிறார்கள். இந்த அதிரடிகளால், பாட்டில் கழிவுகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், வன விலங்குகளின் நலனும் காக்கப்படும் என்று நம்பப்படுகிறது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+