இதுவும் லிஸ்ட்ல இல்லியே.. காலையிலேயே டாஸ்மாக்கில் பரபரப்பு.. நாளைக்கு லீவு வேற.. "தள்ளாடுதே" தமிழகம்
சென்னை: நாளைய தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று டாஸ்மாக்குகளில் மது விற்பனை வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் நடைபெறுவதால், தேர்தல் பிரசாரம் முடிவடையும் நாளிலிருந்து, வாக்குப்பதிவு நடைபெறும் 19-ந்தேதி வரை மூன்று நாட்கள் டாஸ்மாக் மூடப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது.. அத்துடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4-ந்தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது.

டாஸ்மாக்: அதன்படியே, கடந்த புதன்கிழமை 17ம் தேதி முதல், நேற்று வெள்ளிக்கிழமை 19ம் தேதி வரை 3 நாள்களுக்கு தொடர்ந்து அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சாா்ந்த பாா்கள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன..
3 நாட்கள் தொடர் விடுமுறை என்றதுமே, குடிமகன்களுக்கு தூக்கி வாரிப்போட்டது.. உடனே கடந்த செவ்வாய்க்கிழமை அதாவது 16ம்தேதி, டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுக்க துவங்கினார்கள்.. 3 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்கினார்கள்.. இதனால் அன்றைய டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது..
பாட்டில்கள்: பாட்டில்களை வாங்கி அங்கேயே வயிறு முட்ட குடித்துவிட்டு, தங்களது தேவைக்காக மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். சிலர் கார் உட்பட பல்வேறு வாகனங்களை கொண்டுவந்து, அதில் மதுபான பெட்டிகளை வாங்கி கொண்டு போனார்கள்.
கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா? அந்த 16ம் தேதி, ஒரே நாளில், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ. 400 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது.. அதாவது, வழக்கமான விற்பனையை விட, டாஸ்மாக் கடைகளில் சுமார் டபுள் மடங்கு அதிகமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.
மதுவிற்பனை: தினமும் மது விற்பனை ரூ.150 கோடி அளவுக்கு இருக்குமாம்.. ஆனால், 16ம்தேதி டபுள் மடங்கு எகிறிவிட்டது. பொங்கல், தீபாவளி பண்டிகை நாட்களில்கூட ரூ.100 கோடிகளுக்கு மட்டுமே வசூலாகும் நிலையில், இப்படி ஒரேடியாக 400 கோடி ரூபாய் வசூல் வந்தது கிடையாதாம்.
இப்போது 3 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் இன்று திறக்கப்பட்டுள்ளது.. ஆனால், குடிமகன்களுக்கு இன்னொரு அதிர்ச்சி என்னவென்றால், மஹாவீா் ஜெயந்தி தினமான ஞாயிற்றுக்கிழமை அதாவது நாளை ஏப்ரல் 21ம் தேதியும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், இன்றைய தினமும் காலையிலேயே டாஸ்மாக்கை நோக்கி படையெடுத்துவிட்டார்கள் குடிமகன்கள்.
பாராளுமன்ற தேர்தல்: வேலூரில் பாராளுமன்ற தேர்தலையொட்டி கடந்த 17-ந்தேதி முதல் நேற்று 19-ந்தேதி வரை 3 நாட்கள் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து நாளையும் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், காலையிலேயே டாஸ்மாக் திறந்ததுமே கூட்டம் கூட்டமாக வந்துவிட்டனர். தேவையான மது பாட்டில்களை வாங்கி இருப்பு வைக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்..
எனினும், மது பாட்டில்களை அதிகமாக வாங்கிக்கொண்டு, இந்த மதுபாட்டில்களை திருட்டுத்தனமாக கூடுதல் விலைக்கு விற்கவும் வாய்ப்புள்ளது.. அதனால்தான், மது விற்பனையை தடுப்பதற்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்றைய தினமும் வழக்கமான விற்பனையை விட கூடுதலாக மது விற்பனை நடக்கும் என்கிறார்கள்.. எனினும், காலையிலேயே டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குவிந்து விற்பனை களை கட்டிக்கொண்டிருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications