டாஸ்மாக் ரூல்ஸ் மாறுது? டாஸ்மாக்கில் ஒருவருக்கு எத்தனை பாட்டில்? விதிமுறைகள் தேவை.. யார்னு பாருங்க
சென்னை: டாஸ்மாக் கடைகளில் புதிய விதிமுறைகளை உருவாக்கிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்கு என்ன காரணம்?
டாஸ்மாக் கடைகளில் நிலவும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் அவ்வப்போது கோரிக்கைகளை விடுத்தவாறே உள்ளது.

சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலின்போதுகூட, மதுகூடங்களில் மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டதால் மதுக்கடைகள் 'சீல்' வைக்கப்பட்டுள்ளதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது..
பாதுகாப்பு: 21 வருடங்களாக தின கூலிகளாகவே, எவ்வித கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் பணிபுரியும் டாஸ்மாக் பணியாளர்களிடம் தமிழ்நாடு அரசும், தேர்தல் ஆணையமும், டாஸ்மாக் நிர்வாகமும் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும், மதுக்கூடங்களில் நடைபெறும் சட்ட அத்துமீறல்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளும், டாஸ்மாக் அதிகாரிகளும் இணைந்து நடவடிக்கை எடுத்து பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தது.
இந்நிலையில், டாஸ்மாக்குகளில் புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்திருக்கிறது.. இது தொடர்பாக தமிழக டாஸ்மாக் பணியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் தனசேகரன் சொல்லும்போது, "மது வாங்க வருவோர், ஒரு பாட்டில், 2 பாட்டில் என்று வாங்குவார்கள்.. ஆனால், மதுக்கூடங்களுக்கு மது அருந்த வருவோர், நேரடியாக மதுக்கூடத்திற்கு சென்று, அங்கு பணிபுரியும் ஊழியரிடம் மது வாங்கி வரச்சொல்லி அனுப்புகிறார்கள்.
வாய்ப்பில்லை: அவர்களும் ஒரு மேஜைக்கு 2, 3, பாட்டில் வீதம், 4-5 மேஜைகளுக்கு சேர்த்து, ஒரே சமயத்தில் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கிச் செல்கிறார்கள்.. இது, மது அருந்த வந்தவர்களுக்கு வாங்கப்படுகிறதா? அல்லது பதுக்கி விற்க வாங்கப்படுகிறதா? என்பதெல்லாம் மதுக்கடை ஊழியர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
ஆனால், கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்கும்போது, போலீசாரிடம் பிடிபட்டு விசாரணையில், "எங்கிருந்து இவ்வளவு பாட்டில் வந்தது" என்று கேட்டால், டாஸ்மாக் ஊழியர்களை கைகாட்டி விடுகிறார்கள்.. இதனால், டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமானால், தனிநபர் ஒருவருக்கு ஒருமுறை எத்தனை பாட்டில் விற்கப்பட வேண்டும்? என்ற விதிமுறையை டாஸ்மாக் உருவாக்கி, விரைவில் வெளியிட வேண்டும்.
மதுக்கூடத்தில் பணிபுரிவோருக்கு, ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணம் பெற்று மது விற்க வேண்டுமா? எனவும், டாஸ்மாக் நிர்வாகம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கெண்டுள்ளார்.
அறிக்கை: இதனிடையே, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் தனசேகரன் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.. அந்த அறிக்கையில் உள்ளதாவது:
"கள்ளக்குறிச்சி நிகழ்வின் காரணமாக டாஸ்மாக் நிர்வாகம் கடை ஊழியர்களிடம் யாருக்கும் மொத்தமாக சரக்குகள் கொடுக்கக் கூடாது என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனாலும், கள்ளச்சந்தை வியாபாரிகளும், பாரில் பணிபுரிபவர்களும் ஒன்று, இரண்டாக வாங்கி மொத்தமாக சேர்த்து, பின்னர், கடையை அடைத்த பின்னர் விற்பனை செய்கிறார்கள்.
சில்லறை விற்பனை: விதிமீறும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், தனிநபர் தனது சுய லாபத்திற்காக சில்லரையாக வாங்கி சேர்த்து டாஸ்மாக் கடை மூடியிருக்கும் நேரத்தில் விற்றால் அதற்கு டாஸ்மாக் ஊழியர் எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாது. ஒரு நபருக்கு எத்தனை பாட்டில்கள் கொடுக்க வேண்டும் என்று விற்பனை விதிகள் எதுவும் இதுவரை எழுத்துப் பூர்வமாக இல்லை.
எனவே, கடைகளில் முறைகேடு இருந்தாலோ, அல்லது கடை பணி நேரத்தில் மொத்தமாக சரக்கு கொடுக்கும்போது பிடிபட்டாலோ தாங்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு ஆட்சேபணை இல்லை. இதுபோன்ற நிகழ்வுகள் தொடராமல் இருக்க, தனிநபர் ஒருவருக்கு எத்தனை மது பாட்டில்கள் விற்பனை செய்ய வேண்டும். அதற்கான விதிமுறையை நிர்வாகம் உருவாக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications