குடிகாரர்களுக்கு மீண்டும் ஷாக்.. மூடப்படும் டாஸ்மாக்! ’முன்னெச்சரிக்கை’ நடவடிக்கைக்கு ரெடியாகுங்க!
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதியான நாளை நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையின் போது சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன எனவும், விதிகளை மீறி மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடுமையான எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மே 1, மற்றும் வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்ரல் 21, 22, 23 ஆகிய நாட்களில் டாஸ்மாக் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த முறை சுமார் 85 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகியிருப்பதால், யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.

பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணியே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என ஒரே குரலில் கூறுகின்றன. முக ஸ்டாலின் தலைமையிலான திமுக 120க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என பல கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் திமுக தரப்பில் ஒரு நம்பிக்கை காணப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கை மாநிலம் முழுவதும் 62 மையங்களில் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும். அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். இந்த பணிகளை வெளிப்படையாகவும் சீராகவும் நடத்துவதற்காக ஆயிரக்கணக்கான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கூடுதலாக உதவி தேர்தல் அலுவலர்கள், நுண் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தொகுதியுக்கும் தனித்தனி பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் கடுமையாக செய்யப்பட்டுள்ளன. மும்மடங்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நபரும் புகைப்பட அடையாள அட்டையுடன் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
குறிப்பாக, இந்த முறை முதன்முறையாக கியூஆர் குறியீடு அடிப்படையிலான அனுமதி முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களின் உள்ளே ஒவ்வொரு சுற்றுக்கும் தனித்தனி மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. பெரிய தொகுதிகளில் கூடுதல் மேசைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பல கல்வி நிறுவனங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
மேலும், பாதுகாப்பு பணிக்காக மாநில காவல்துறையுடன் மத்திய ஆயுதப்படை வீரர்களும் இணைந்து பணியாற்ற உள்ளனர். எந்த வித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதியான நாளை நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026, சுதந்திரமாகவும், நியாயமாகவும், அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்திடும் நோக்கில், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள்-2003, விதி 12 (2)-ன் படி உரிமம் பெற்று இயங்கி வரும், இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானம் (IMFL) சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த பார்கள் மற்றும் எப்.எல்.2 முதல் எப்.எல்.11 வரை (எப்.எல்.6 தவிர) உரிமம் பெற்ற உரிமத்தலங்கள் அனைத்தும் (04.05.2026) திங்கள் கிழமை வாக்கு எண்ணிக்கை நாள் அன்று மூடப்பட்டிருக்கும்.
மேலும், (04.05.2026) திங்கள் கிழமை அன்று மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது என்றும், மேலும், அன்றைய தினங்களில் விதிகளுக்கு மாறாக மதுவிற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என கூறப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications