டாஸ்மாக் கடைகளுக்கு இந்த மாதம் 2 நாள் ‘லீவ்’.. சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்!
சென்னை: வரும் ஜனவரி 15 ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. தமிழ்நாடு முழுவதும் 4,000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினமும் 100 முதல் 120 கோடி ரூபாய் அளவுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. புத்தாண்டு மற்றும் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில், மதுபானங்களின் விற்பனை சுமார் 200 கோடி ரூபாயை எட்டும்.

டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு ஆண்டுக்கு 8 நாட்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக விடுமுறை அளிக்கப்படுகிறது. திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு தினம், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி போன்ற குறிப்பிடத்தக்க நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு சிறப்பு விடுமுறைகள் அனுசரிக்கப்படுகின்றன.
அதுபோக, சில குறிப்பிட்ட நாட்களில் உள்ளூர் விடுமுறைகளும் அறிவிக்கப்படுகின்றன. இந்நிலையில் இந்த ஜனவரி மாதம் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட இருக்கின்றன. திருவள்ளுவர் தினம் ஜனவரி 15 ஆம் தேதி புதன்கிழமை வருகிறது. அன்றைய தினம் அதிகாரப்பூர்வமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி சனிக்கிழமை டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளது.
சென்னையில் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் வரும் ஜனவரி 15 ஆம் தேதி விடுமுறை அறிவித்துள்ளார் சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 15 ஆம் தேதி சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை. அதேபோல, குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதியன்றும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்!












Click it and Unblock the Notifications