தமிழகத்தில் இந்த மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மொத்தமாக மூடப்படும்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கையை ஒட்டி மொத்தம் நான்கு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் லோக்சபா தேர்தல் வரும் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.

Tasmac shops will be closed in tamilnadu from April 17 to 19 due to lok Sabha election

அதைத் தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்களும் நடக்கிறது.

லோக்சபா தேர்தல்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கு மொத்தம் 39 லோக்சபா தொகுதிகள் உள்ளன. அனைத்து லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரத்திற்கும் குறைவான காலமே இருப்பதால் அனைத்து தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளன.

வாக்குப்பதிவு 19ஆம் தேதி நடக்கும் நிலையில், வரும் 17ஆம் தேதி மாலை ஐந்து மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. இதன் காரணமாகத் தேர்தல் பிரசாரம் முடிந்த நாளில் இருந்து வாக்குப்பதிவு நடக்கும் ஏப்ரல் 19 வரை தமிழகத்தில் இருக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது.

டாஸ்மாக் கடைகள் மூடல்: அதை ஏற்றுத் தமிழக அரசு இப்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவை ஒட்டி 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 17, 18 மற்றும் 19 ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் என அனைத்தும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஏழு கட்ட தேர்தல் முடிந்து பிறகு வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனால் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+