என்கிட்ட அதிகாரம் இருந்தால் 24 மணி நேரமும் டாஸ்மாக்.. குடிச்சுட்டு சாகு! திமுக மாஜி எம்எல்ஏ புகழேந்தி சர்ச்சை பேச்சு
சென்னை: எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால், 10 மணி நேரம் இல்லை.. 24 மணி நேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன் என்று திமுக முன்னாள் எம்.எல்.ஏ நெல்லிக்குப்பம் புகழேந்தி பேசியுள்ளார். மேலும், குடிக்கின்றவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர் சொல்லி, இவர் சொல்லி எல்லாம் திருந்த மாட்டான்.. அவனாக திருந்தினால் மட்டுமே ஒழிய மற்ற யாராலையும் அவன திருத்த முடியாது. ஏன் இதை சொல்கிறேன் என்றால் நீ நாட்டுக்கு வேஸ்ட்.. குடித்து சாகு என்றும் கூறினார்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ நெல்லிக்குப்பம் புகழேந்தி 'எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால், 10 மணி நேரம் இல்லை.. 24 மணி நேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்' என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

நாங்க தோற்பதற்கு காரணம் இதுதான்
இதற்கு முந்தைய தேர்தலில் நாங்க ஆட்சிக்கு வராததற்கு என்ன காரணம் தெரியுமா? நாங்க தான் காரணம்.. எப்படி என்று கேட்கிறீர்களா?.. நாங்க வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருக்க வேண்டும்.. ஏனென்றால், எங்க தளபதி ஸ்டாலின் சொன்னார்.. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், டாஸ்மாக் கடைகளை முதலில் மூடுவோம் என்று சொன்னார்.
நாங்க என்ன நினைத்தோம் என்னவென்றால், டாஸ்மாக்கை மூடுவோம் என்று சொன்னதும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு பெண்களும் சேர்ந்து எங்களுக்கு ஓட்டு போடுவாங்க என்று கணக்கு பண்ணினோம். அப்பா குடிக்கிறார், அண்ணன் குடிக்கிறான், கணவன் குடிக்கிறான், மச்சான் குடிக்கிறான்.. மாமா குடிக்கிறான் என்று நினைத்து ஒட்டுமொத்த பெண்களும் எங்களுக்கு ஓட்டு போடுவார்கள் என்று நினைத்தோம்..
ஆனால் குடிக்கிறவர்கள் எல்லாரும் சேர்ந்து என்ன பண்ணினாங்க தெரியுமா?.. தேர்தல் பிரச்சாரம் ஆரம்பிக்கிறதே டாஸ்மாக்கில் தான்.. சேல்ஸ்மேனும், அங்கு இருக்கிற சூப்பர் வைசரும் தான் தேர்தல் பிரசார கருவியே.. இன்னைக்கு தான் கடைசி, இனி சரக்கு கிடையாது என்று சொன்னார்கள். இவங்க என்னன்னா, சாப்பாடு இல்லாம கூட வாழ்ந்துடுவோம்.. ஆனால் சரக்கு இல்லாமல் எப்படி வாழ முடியும்.. என்று கொஞ்சமாவது கொடுங்க என்று கேட்கிறார்கள்.
24 மணி நேரமும் திறந்து வைப்பேன்
ஆனால் தேர்தலோட 3 நாட்களுக்கு டாஸ்மாக் அடைச்சாச்சு.. இப்போ இவங்களால இருக்க முடியல. 3 நாட்களே இப்படி என்றால், மொத்தமாக மூடினால் என்ன ஆகும் என நினைத்து குடிக்கிறவங்க எல்லாரும் சேர்ந்து முடிவு பண்ணி தான்.. ஓட்டை மாற்றி போட்டுவிட்டார்கள். இதனால் தான் நாங்கள் ஆட்சிக்கு வர முடியல..
இந்த தேர்தலில் எங்களிடம் கேட்டாங்க.. டாஸ்மாக்கை மூடுவீங்களா என்று.. நாங்கள் வாயை மூடிக்கொண்டோம்.. இப்போது நான் ஒன்று சொல்லிக்கொள்கிறேன்.. எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால், 24 மணி நேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்". இது திமுகவின் கருத்து இல்லை. முதல்வர் ஸ்டாலினின் கருத்து கிடையாது.. எனது தனிப்பட்ட கருத்து..
ஏன் இதை சொல்கிறேன் என்றால்
மதியம் 12 மணிக்கு திறந்து இரவு 10 மணிக்கு எல்லாம் மூட சொல்ல மாட்டேன்.. 24 மணி நேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்.. ஏன் இதை சொல்கிறேன் என்றால், குடிக்கின்றவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர் சொல்லி, இவர் சொல்லி எல்லாம் திருந்த மாட்டான்.. அவனாக திருந்தினால் மட்டுமே ஒழிய மற்ற யாராலையும் அவன யாரலயும் திருத்த முடியாது. ஏன் இதை சொல்கிறேன் என்றால் நீ நாட்டுக்கு வேஸ்ட்.. குடித்து சாகு.. மிச்ச மீதி இருப்பவர்களை வைத்து நாங்க ஆட்சி செய்கிறோம்.. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications